மஜித் மஜிதியினை அழைக்கும் அக்கா குருவி இயக்குனர் சாமி..!

ரான் இயக்குநர் மஜித் மஜிதியின் மிகச் சிறந்த திரைப்படம் சில்ரன் ஆஃப் ஹெவன். இந்த திரைப்படம் தமிழில் ’அக்கா குட்ருவி’ என்ற  தலைப்பில் வெளிவர உள்ளது. இந்தப்படத்தில் தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இயக்குநர் மஜித் மஜிதியின் சில்ரன் ஆஃப் ஹெவன்’ இப்படம் உலக சினிமா ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று உலகம் முழுக்க பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளது.

1997ஆம் ஆண்டு வெளியான  சகோதரன் சகோதரி உணர்வுகளை காவியமாக வெளிப்படுத்திய இப்படத்தின் கதைகருவை கொண்டு தமிழில் ‘அக்கா குருவி’ என்ற தலைப்பில் இயக்குநர் சாமி இப்படத்தை இயக்குகிறார். இதைப் பற்றி இயக்குனர் சாமி கூறுகையில்  இப்படத்தின் மிக முக்கிய கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7வயது தங்கை கதாபாத்திரங்களுக்கான 200க்கும் மேற்பட்டவர்களை தேர்வு நடத்தி இறுதியாக மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

 மேலும் கிளாசிக்கல் பிரதான கதாபாத்திரமாக ஜோடி ‘ஷூ’ ஒன்று இடம்பெறுகிறது என்றார்.

இந்தப்படத்தின் இசைவெளியீடு அடுத்தமாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் சாமி, கூறியிருக்கிறார்.

இதற்கு சிறப்பு விருந்தினராக ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தை இயக்கிய இயக்குனர் மஜீத் மஜிதியை  அழைக்கவிருப்பதாகவும் கூறுகிறார்.

 மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை நிறுவனங்கள் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts