Petta Rap: “இதான் யூஸா?” இந்தி மொழியை கிண்டலடித்த இயக்குநர் பேரரசு!
“பக்கத்தில உட்கார்ந்து இருந்தும், இந்தி தெரியாம, நடிகை சன்னி லியோன்கிட்ட பேச முடியல” என்று மேடையில் சொல்லி, இந்தி மொழியை கிண்டலடித்தார் இயக்குநர் பேரரசு.
பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட ராப் படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் வேதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சன்னி லியோனும் நடித்துள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ப்ளூ ஹில் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தினை எஸ்.ஜே. சினு இயக்கியுள்ளார்.படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு “முன்பெல்லாம் இந்தி தெரியவில்லை என்றால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்தி தெரியாது போடா என கூறுவோம். ஆனால் இப்போது இந்தி தெரியவில்லை என வருத்தமாக உள்ளது. காரணம், மேடையில் எனக்கு அருகில் நடிகை சன்னி லியோன் அமர்ந்துள்ளார். அவரிடம் இரண்டு வார்த்தைகள் கூட பேச முடியவில்லை. இந்தி தெரிந்திருந்தால் அவரிடம் பேசியிருக்க முடியும். இந்தி தெரியவில்லை என வருத்தமாக உள்ளது. இதுக்காகவே இந்தி கத்துக்கனும்” என்றார். கூட்டத்தில் இருந்த அனைவரும் இதைக் கேட்டு சிரித்தனர்.