பார்த்திபன் பறக்கும் முத்தம் ! விழிப்புணர்வு  குசும்பு…!

கொரோனா வைரஸ் நம் கண்ணுக்குத் தெரியாமல் நம்மை ஆட்டிவைக்கும் உயிர் கொல்லி. உலகமுழுவதும் அதன் கோரப்பிடில் சிக்கி சின்னபின்னமாகிக் கொண்டுயிருக்கிறது. இந்திய முழுவதும் ஊடங்கு என அரசு மக்களை காப்பதற்கு போராடி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் நடிகைகள் என அவர்கள் பானியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து தனக்கே உரிதான பாணியில் பார்த்திபன் தனது விழிப்புணர்வு பதிவிவை தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை.

அரசு ஒருபக்கம் ஊரடங்கு நீட்டிப்பு… கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு சமூக விலகளை ஒவ்வொரு நாடும் அறிவுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன்  இன்று நீடித்த உறவுக்கு.. தற்காலிக விலகல் உகந்தது!

பறக்கும் முத்தம் அனுமதிக்கப்பட்டது! என்று தனது ட்விட்டரில் குசும்பாக பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் இடைவெளி எதுவும் இல்லாமல் நெருக்கமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் முட்டை ஒரு பந்து விழுந்து அத்தனை முட்டைகளும் உடைவது போலும் தனித்தனியாக இருக்கும் முட்டைகள் பாதுகாப்பாக இருப்பது போன்று அந்த வீடியோவில் உள்ளது.

Related Posts