பால்கனி அரசு தரையில் நடப்பதை கவனிக்க… நடிகர் கமல் சாடல்…!
கொரோனா தற்காப்பு நடவடிக்கை காரணமாக 144 தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டு மே 3 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று உத்தரப் பிரதேசம் ,பிகார் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கு நேற்று மும்பை பாந்தரா பேருந்து நிலையத்துக்கு கூட்டம் கூட்டமாக வந்த சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு சென்ற காவல்துறையினர் கூடியிருந்த மக்களை அப்புறப்படுத்த முயன்ற போது போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு கூடியுள்ள மக்களை உடனடியாக சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுனர்.
இந்த சம்பவம் குறித்து மக்கள் நீதிமைத்தின் தலைவர் நடிகர் கமல்காஹன் தனது ட்விட்டர் பக்கத்தில் பால்கனி அரசாங்கம் தரையில் நடப்பதை கவனிக்க வேண்டும் என ட்விட் செய்துள்ளார்.
All the balcony people take a long and hard look at the ground. First it was Delhi, now Mumbai. The migrant crisis is a time bomb that must be defused before it becomes a crisis bigger than Corona. Balcony government must keep their eyes on what’s happening on the ground too.
அனைத்து பால்கனியில் உள்ளவர்களும் தரையில் நடப்பதை கவனிக்க வேண்டும். அடித்தட்டு மக்களின் பிரசனைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் அது டெல்லி, இப்போது மும்பை.
புலம்பெயர்ந்தோர் நெருக்கடி என்பது ஒரு நேர வெடிகுண்டு ஆகும், இது கொரோனாவை விட பெரிய நெருக்கடியாக மாறும் முன்பு அதைத் தடுக்க வேண்டும். பால்கனி அரசாங்கம் தரையில் என்ன நடக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். என நடிகர் கமல் கூறியுள்ளார்