ஊரடங்காள் வீட்டில் நடந்த புதுப்பட பூஜை..!

இந்தியமுழுவதும் ஊரடங்கு இருக்கும் நிலையில் வெளியில் எந்த நிகழ்ச்சிகளும் நடக்க  தடையுள்ளது. இந்த சமயத்தில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஜெகன் சாய் புதுமையான கதை அம்சத்துடன் கூடிய ஒரு படத்தை இயக்க இருக்கிறார். ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் சார்பாக இப்படத்தின்  தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

தமிழ்ப் புத்தாண்டான சித்திரை ஒன்று  இப்படத்தின் பூஜை மிக எளிமையான முறையில் ஜெகன்சாய் அவரது வீட்டிலே நடைபெற்றது.
இந்தப் படம் எல்லாத்தரப்பு ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளக்  கூடிய படமாக இருக்கும் என நம்புகின்றனர்.

 

இப்படத்தில்  தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். முன்னணி டெக்னிஷியன்ஸ் பணியாற்ற இருக்கிறார்கள் அதைப்பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

 இந்தப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகவுள்ளது .

ஜெகன்சாய்  ஏற்கனவே ‘ஜாஸ்மின்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப்படம் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள இந்த ஊரடங்கு நாட்கள் முடிந்த பின் வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படத்தின் பூஜையானது மிகப் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தனர்.  கொரோனா காரணமாக மிக எளிமையான முறையில் தயாரிப்பாளர் ஜெகன்சாய்  வீட்டில் நடைபெற்றது.

 

Related Posts