பரம்பொருள் – விமர்சனம்

பரம்பொருள் – விமர்சனம்

அரவிந்த் ராஜ் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் பரம்பொருள். இந்த படத்தில்  அமிதாஷ் பிரதான், காஷ்மீரா பர்தேசி, பாலாஜி சக்திவேல், வின்சென்ட் அசோகன், டி. சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பரம் பொருள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். வீடுகளில் புகுந்து சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து வருகிறார் கதையின் நாயகர்களின் ஒருவனான அமிதாஷ். மறுபுறம் சரத்குமார் – காவல்துறை அதிகாரியாக வருகிறார். அவர் அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்தி பணம் சம்பாதித்து வருகிறார். இந்த இருவரின் இலக்கும் பணமாக இருக்கிறது. இவர்கள் எப்படி இணைந்து அடுத்த கட்டத்துக்கு செல்கின்றனர் என்பது மீதி கதை.

அமிதாஷ் வழக்கம் போல் திருடப்போகிறார் அது சரத்குமார்  வீடு அவரிடம் மாட்டிக் கொள்கிறார். தன் குடும்ப சூழலை கூறி மன்னிப்பு கேட்டு தன் மீது வழக்கு எதுவும் போடாமல்  விட்டுவிட கூறுகிறார். அதற்கு சரத்குமார் நான் சொல்வதை நீ கேட்டால்.. உன்னைக் காப்பாற்றுகிறேன் என்கிறார்.

இந்த சூழ்நிலையில் அவர்கள் கைகளுக்கு ஆயிரம் ஆண்டுகள் பழமையான  சிலை ஒன்று கிடைக்கிறது. பல கோடி ரூபாய்க்கு விலை போகும். அதை விற்பதற்கு இருவரும் தயாராகிறார்கள். அவர்கள் அந்த சிலையை விற்றார்களா? இல்லையா? அவர்களின் திட்டம் ஈடேறியதா? இல்லையா? என்பதுதான் படத்தின் திரில்லர் திரைக்கதை.

காவல்துறை அதிகாரியாக சரத்குமார் மிரட்டலான நடிப்பு வெளிப்படுத்தியிருக்கிறார். நடிகர் அமிதாஷ் கதைக்கு கட்சிதமான நடிப்பை கொடுத்திருக்கிறார். கதாநாயகியாக வரும் காஷ்மீரா பர்தேசி சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் திரைக்கதையுடன் ஒன்றிப்போகிறார்.

திரில்லிங், டிவிஸ்ட் என கதையின் காட்சிகள் இயக்குனருக்கு சபாஷ் போட வைக்கிறது. ஒளிப்பதிவு, பின்னணி இசை கதைக்கு கட்சிதமாக பொருந்துகிறது. மொத்தத்தில் படம் ரசிக்க வைக்கிறது…