பணி : திரைவிமர்சனம்

பணி : திரைவிமர்சனம்

Appu Pathu Pappu Production House மற்றும் ADS Studios தயாரிப்பில்,நடித்திருப்பதோடு ஜோஜூ ஜார்ஜ் முதன் முறையாக இயக்கி இருக்கும் படம், பணி. மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம், தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. இப்படத்தை தமிழகமெங்கும் ஶ்ரீ கோகுலம் மூவிஸ் வெளியிடுகிறது.

இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், சாகர் சூர்யா, ஜுனைஸ் வி.பி., பாபி குரியன், அபிநயா, அபயா ஹிரண்மயி, சீமா, சாந்தினி ஸ்ரீதரன், பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், ரினோஷ் ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். பணி படத்திற்கு விஷ்ணு விஜய், சாம் சி. எஸ் இசையமைத்துள்ளார்.

கேரள மாநிலத்தின் திருச்சூர் பகுதியில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் அவரது நண்பர்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றனர். கூடவே கட்டப்பஞ்சாயத்து செய்து, முக்கிய புள்ளிகளாக வலம் வருகின்றனர். இவர்கள் மீது ஏராளமான வழக்குகள் இருந்தாலும் செல்வாக்கால் நடமாடுகிறார்கள்.இன்னொருபுறம், பணத்திற்காக இரண்டு இளைஞர்கள் திருச்சூர் பகுதியில் ஒருவரை கொலை செய்கின்றனர்.

இந்த கொலைக்கும் ஜோஜு ஜார்க்கும் என்ன தொடர்பு.. இதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் என்ன என்பதை, அதிரடி ஆக்சன் காட்சிகள் மூலம் சொல்லும் படம்தான் பணி.

ஜோஜு ஜார்ஜ் நடிப்புத் திறமையை அனைவரும் அறிவார்கள். அதே நேரம், அவரது இயக்கத்தில் வரும் முதல் படம் என்பதால் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறார் ஜோஜூ.

ஆக்சன் காட்சிகளிலும் சரி, எமோஷனல் காட்சிகளிலும் சரி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். படத்தில் வரும் ட்விஸ்ட்டுகளும் கவனத்தை ஈர்க்கின்றன.வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இரண்டு இளைஞர்களும் சிறப்பான நடிப்பை அளித்து உள்ளனர். அவர்கள் தான் ஒட்டுமொத்த படத்தையும் சுமக்கின்றனர்.

படம் துவங்கியதில் இருந்து இடைவேளை வரை பரபரப்புடன் கதை நகர்கிறது. இடைவேளை முடிந்து கிளைமாக்ஸ் வரும் வரை படம் மெதுவாக நகர்கிறது. ஆனால் அது அர்த்தமுள்ள நகர்வுதான். ஆகவே சுவாரஸ்யத்துக்கு குறைச்சல் இல்லை.

ஒளிப்பதிவு இசை ஆகியவை படத்துக்கு பலம்.

மொத்தத்தில் முதல் படத்திலேயே இயக்குநராக முத்திரை பதித்துவிட்டார் இயக்குனர் ஜோஜு ஜார்ஜ்.

Related Posts