‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ – விமர்சனம்

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ – விமர்சனம்

ரமேஷ் வெங்கட்  இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம்  ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. இயக்குனராக வேண்டும் என்ற ஆசையுடன் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் நாயகன் சத்யமூர்த்தி.  அவரது நண்பர்கள் கோபி, சுதாகர், விஜய் ஆகியோருடன்  படம் பார்ப்பதற்காக பழைய திரையரங்கும் ஒன்றுக்கு செல்கிறானர். அதே திரையரங்கிற்கு யாஷிகா ஆனந்தும், அவரது தோழி ஹரிஜாவும் வருகிறார்கள். அவர்களைப் போல் மேலும் சிலர் அந்த திரையரங்கிற்குள் படம் பார்க்க வந்திருக்கின்றனர்.  திரையில் அவர்கள் பார்க்க நினைத்த படம் ஓடாமல் அதற்கு பதில்  ஒரு பேய் பேடம் ஓடுகிறது.

 

அந்த படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே அந்த திரையரங்கில் சில அமானுஷ்ய விசயங்கள் நடக்கிறது. படம்பார்க்க வந்தவர்கள் பயத்தில் அங்கிருந்து தப்பிக்க நினைக்கின்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

எத்தனை முறை முயற்சித்தாலும், அவர்கள் திரும்ப…திரும்ப…

அந்த திரையரங்கிற்குளேயே சுற்றி வருகின்றனர். இறுதியில் அங்கிருப்பவர்கள் தப்பித்தார்களா?, அந்த திரையரங்கில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களின் பின்னணி என்ன? என்பதே ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் மீதிக்கதை.

 

கோபி, சுதாகர், விஜய், சாரா, அப்துல், சந்தோஷ், அகஸ்டின், ஜெயசீலன் என யுடியுப் பிரபலங்களும், சத்யமூர்த்தி, யாஷிகா ஆனந்த், கிரேன் மனோகர், முனீஷ்காந்த் போன்ற திரை பிரபலங்களும் என சுமார் 12 பேர் படம் முழுவதும் வருகிறார்கள். கிளைமாக்ஸ் நெருங்கும் போது இந்த கூட்டத்துடன் ஜாங்கிரி மதுமித்தாவும், விஜே ஆஷிக்கும் இணைகின்றனர். இவர்கள் செய்யும் காமெடி படம் பார்க்கும் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

 

முனீஷ்காந்த், ஜாங்கிரி மதுமித்தா, கிரேன் மனோகர், சாரா, அப்துல்  ஆகியோர் ரசிகர்களை கமெடியில் தங்களையே மறக்க வைத்துள்ளனர்.  சத்யமூர்த்தி, ஆர்.எஸ்.கார்த்திகேயன், ரித்விகா, ஜார்ஜ் மரியன் ஆகியோர் கதைக்கு ஏற்ற நடிப்பை குறையில்லாமல் கொடுத்திருக்கின்றனர்.

 

ஜோஸ்வா ஜே.பெரஷின் ஒளிப்பதிவும், கெளசிக் கிரிஸின் இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

திரையரங்கிற்குள் நடக்கும் ஒரு திகில் கதையை முடிந்த அளவு திகிலாக சொல்லியிருக்கும் இயக்குநர் ரமேஷ் வெங்கட், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்த விதம் ரசிகர்களை ஈர்க்கிறது.

 

திகில் கதை என்றாலும் காமெடி,கலாட்டா,  என புதுமை யை செய்திருக்கிறார் இயக்குனர்.

 

மொத்தத்தில், புது முயற்சியாக சொல்லப்பட்டிருக்கும் இந்த ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படம் சிறிய பட்ஜெட்டில் நிறைவான திகில் மற்றும் நகைச்சுவை படமாக ரசிகர்களை உச்சாகப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.