நானி நடிக்கும் ’வி’ நாளை முதல் அமேசான் ப்ரைமில்

சென்னை; நானி, சுதீர் பாபு நடிக்கும், ‘வி’ திரைப்படம் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மோகன கிருஷ்ணா மற்றும் நானியும் 12வருடங்கள் கழித்து இந்தப் படத்தில் இனைகின்றனர். இந்த மாதம் செப்டம்பர் 5ஆம் தேதி  படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்தப் படத்தைப் பற்றி நானி, கூறும் போது’’  ரசிகர்களுக்கு நல்ல பொழுது போக்கு திரைப்படமாக இருக்கும் என்றார். அவர் நடித்த  ‘ஆஷ்தா சம்மா’  திரைப்படம் வெளிவந்து 12 வருடங்கள் கடந்து விட்டன.

தெலுங்கில் அவருக்கு தனி  ரசிகர்கள் பட்டாளமே உண்டு.  மேலும் அவர் ஒவ்வொரு படம் நடிக்கும் போதும் எனது பொறுப்பு அதிகமாகிறது. ரசிகர்களுக்கு நல்ல திரைப்படங்களை மட்டுமே தருவேன் என்றார்.
இயக்குநர் மோகன கிருஷ்ணா  நாயகன் குறித்து பேசும் போது’’ அவர் திறமையான நடிகர். வித்தியாசமான இளைஞனாக பல வருடங்களுக்கு முன்னாடி அவரைப் பார்த்தேன் ஒரு நல்ல நடிகரைத்தான் நான் அறிமுகம் செய்திருக்கிறேன் என்றார்.

2016-ஆம் ஆண்டு நாங்கள் எடுத்த ‘ஜென்டில்மேன்’ திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. ஒரு நடிகராக நன்றாக முதிர்ச்சி பெற்றுள்ளார், நிறைய கற்றுக்கொண்டிருக்கிறார்.  நானியின் 25-வது படமான ’வி’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதிக பொருட்செலவில் எடுக்கப்படும் தெலுங்கு திரைப்படங்களில் இப்படி ஒரு படம் எடுப்பது எளிதல்ல. வழக்கமான படங்களுக்கு நேர்மாறாக இருக்கும் வித்தியாசமான படங்களை தேர்வு செய்வதும், அதில் வெற்றி பெற்று தனக்கென ஒரு பெயர் பெறுவதும் மிகப்பெரிய சாதனை. அவரை அறிமுகப்படுத்தியவன் என்கிற ரீதியில் அது எனக்கு அதிகப் பெருமையைத் தருகிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

 
இந்த திரைப்படத்தில் நிவேதா தாமஸ், அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘வி’, அமேசான் ப்ரைம் தளத்தில் செப்டம்பர் 5.9. 2020 முதல்  இந்த தளத்தில் ரசிகர்கள் பார்காலாம் என்றார்.

-யாழினி சோமு

Related Posts