சீரியல் ரசிகரகளுக்கு ஒரு குட் நியூஸ்!! ’ஜி5 க்ளப்’ உள்ளங்கையில் டிவி தொடர்
தொலைகாட்சி தொடர் உங்கள் உள்ளங்கையில் இருக்க வேண்டுமா? இதோ வந்து விட்டது ஜி5 க்ளப். தொலைகாட்சி தொடர் டிவியில் வருவதற்கு முன்னதாகவே நிங்கள் உங்களுக்கு விருப்பமான தொடர்களை முதல் நாள் பார்க்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. பிரபலமான இந்த ஓடிடி தளம், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் புகழை வைத்து, தமிழ் சந்தையில் தனக்கு என ஒரு இடத்தை பிடித்துள்ளது. இன்னும் பலபடுத்தும் விதமாக தற்போது ஜீ5 க்ளப் என்கிற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பகுதிகளை, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்னரே கண்டு களிக்கும் வகையில் மிகக் குறைந்த செலவில் ஜீ 5 க்ளப் அதன் சந்தாதாரரகளுக்குத் தருகிறது.
ஒரு வருட சந்தா தொகை வெறும் ரூ.365 மட்டுமே. இந்த மிகக் குறைந்த கட்டணத்தை செலுத்தி, ஜீ5 க்ளப்பின் சந்தாதாரர்கள், தங்களுக்குப் பிடித்த ஜீ தமிழ் நிகழ்ச்சிகளின் ப்ரீமியர் பகுதிகளை, தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு முன்னரே பார்த்து மகிழலாம். அதாவது தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு ஒரு நாள் முன்னரே, ஜீ5 க்ளப்பின் சந்தாதாரர்கள் தங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை பார்த்து கொள்ள முடியும்.
சமீபத்தில் ரசிகர்களுடன் ஸூம் மூலமாக நேரலையில் கலந்துரையாடிய சின்னத்திரை நட்சத்திரங்கள் விஷ்ணு விஜய், ஆயிஷா, ஸ்ரீகுமா மற்றும் நக்ஷத்ரா ஆகியோர், ஜீ5ன் இந்த முடிவுக்கு பாராட்டை தெரிவித்துள்ளனர்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடரான சத்யாவில், ஆயிஷாவுடன் முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் விஷ்ணு விஜய் பேசுகையில், “ஒரு அற்புதமான முடிவு. எனக்கு ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பல ரசிகர்களுக்கு உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு, ஒரு நாள் முன்னரே அப்படித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஜீ5 க்ளப் தரும். கண்டிப்பாக ஜீ5 க்ளப்பை பலர் தேர்வு செய்வார்கள் எனக் கூறினார்.
இதற்கு பல சின்னத் திரை பிரபலங்கள் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
-யாழினி சோமு