நந்திவர்மன் – திரைவிமர்சனம்

நந்திவர்மன் – திரைவிமர்சனம்

பெருமாள் வரதன் இயக்கத்தில் அருண் குமார் தனசேகரன் தயாரிப்பில் சுரேஷ் ரவி நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் நந்திவர்மன். இந்த படத்தில் ஆஷா வெங்கடேஷ், போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, கஜராஜ், மீசை ராஜேந்திரன், ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர், முல்லை கோதண்டம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பெலிக்ஸ் இசையமைத்துள்ளார்., சான் லோகேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். கிரைம் திரில்லராக உருவாகியிருக்கிறது

நந்திவர்மன் கதை: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் செஞ்சி அருகில் உள்ள அனுமந்தபுரம் என்ற கிராமத்தை பல்லவ மன்னன் நந்திவர்மன் ஆண்டு வருகிறார். அந்த கிராமமே  செல்வ செழிப்புடன் வளமாக இருக்கிறது. இதை அறிந்து கொண்ட கோரா என்ற கொள்ளைக்காரன் அந்த கிராமத்தை அழித்து அனுமந்தீஸ்வரர் கோயிலுக்குள் இருக்கும்  தங்கப் புதையலை கொள்ளை அடிக்க நினைக்கிறான்.

இதை அறிந்து கொண்ட  மன்னன் நந்திவர்மன் கோராவை போரில் தோற்கடித்து தானும் உயிரிழந்து விடுகிறார். பல வருடங்களுக்குப் பிறகு  தற்போதைய காலகட்டத்தில்

போஸ் வெங்கட் தலைமையில் அகழ்வாராய்ச்சி குழுவினர் இந்த கோவிலை பற்றி ஆராய்ச்சி செய்ய அந்த ஊருக்கு வருகின்றனர். அதன் பிறகு அந்த ஊரில் சில அசம்பாவிதங்கள் நடக்கிறது. படத்தின் இறுதியில் தங்கப் புதையலை கண்டுபிடித்தார்களா இல்லையா? அந்த ஊரில் நடைபெறும் அசம்பாவிதங்களுக்கு யார் காரணம் என்பதே நந்திவர்மன் படத்தின் கதை.

இந்த படத்தில் நாயகனாக  சுரேஷ் ரவி குரு வர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக கம்பீரமான தோற்றத்தில் அசத்தியிருக்கிறார். போஸ் வெங்கட் தலைமையில் அனுமந்தபுரம் கிராமத்து கோவிலில்  அகழ்வாராய்ச்சி நடக்கிறது.

ஊர்  தலைவராக கஜராஜ்  நடிப்பில் அசத்தியிருக்கிறார். ஆச வெங்கடேஷ், நிழல்கள் ரவி, முல்லை கோதண்டம் ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துடன்  கச்சிதமாக பொருந்துகின்றனர்.

செயோன் முத்துவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலத்தை கொடுத்திருக்கிறது.

கிரைம் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் நந்திவர்மன் ரசிகர்களுக்கு பிடித்த படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Related Posts