’நாகினி’ 5 வரும் ஜனவரி 21 முதல் கலர்ஸ் தொலைகாட்சியில்..!
சென்னை; தமிழில் பொழுதுபோக்கு சேனல்களில் முன்னிலை வகிக்கும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கற்பனை கதையான நாகினி தொடர் ஏற்கனவே ஒளிபரப்பாகி அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ‘நாகினி 5’ என்ற புதிய தொடரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது. அன்பின் காவியமாக வெளிவரும் இந்த தொடரில் பல புதிய திருப்பங்கள் மற்றும் பழி வாங்குதல் போன்ற சுவாரஸ்யமான கதை அமைப்புடன் இது ரசிகர்களை மகிழ்விக்கும். இந்த தொடர் நாகினி உலகை பற்றியும் அன்பு, கோபம், எதிரிகளை பழிவாங்குதல் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டுள்ளது.
இத்தொடரின் நாயகி சத்ய யுகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன் தொடங்கிய தனது காவியப் போரை முடிவுக்கு கொண்டு வந்து தனது காதல் பயணத்தை நிறைவேற்ற போராடுவதாக கதை செல்கிறது. இத்தொடர் ஜனவரி 21-ந்தேதி வியாழக்கிழமை இரவு 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அதனைத் தொடர்ந்து வாரந்தோறும் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகிறது.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வர்த்தக தலைவர் அனுப் சந்திரசேகரன் கூறுகையில், ஊரடங்கிற்கு பின் புதிய நிகழ்ச்சியை முதலில் வழங்கியது நாங்கள்தான். முற்றிலும் பொழுதுபோக்கு நிறைந்த எங்களின் வெற்றித் தொடரான நாகினியை இந்த சீசனில் மக்களுக்கு மீண்டும் கொண்டு வருவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

