‘பவர் ஸ்டார்’ ஹீரோவாக நடிக்கும் ‘முன்தினம்’ ஃபர்ஸ்ட் லுக்! விமல் – நமோ நாராயணா வெளியிட்டனர்!
பவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘முன்தினம்’. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர்கள் விமல் மற்றும் நமோ நாராயணா வெளியிட்டனர். ‘பவர் ஸ்டார்’ பெற்றுக்கொண்டார்.
இப்படத்தை எல். வி. கிரேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்குகிறார், லோகநாதன். இவர், விழுப்புரத்தில் பிரபல மருத்துவர் ஆவவார்.
‘முன்தினம்’ படத்தில் இயக்குனர் வேலு பிரபாகரன், சங்கர் கணேஷ் மற்றும் ராம் ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர். மேலும் யுவராஜ், ஷமிதா , சாவித்ரி, நெல்லை பெருமாள் , சித்திக் பாஷா, சில்வெஸ்டர் சிம்பு மற்றும் பலர் நடிக்கின்றனர்.
படத்திற்கு ஜீவாவர்ஷினி இசை அமைக்கிறார். படத்தை ‘2எஸ் என்டேர்டைன்மெண்ட்’ சார்பில் எஸ்.வினோத் குமார் வெளியிடுகிறார்.