மிஸஸ் & மிஸ்டர்: திரை விமர்சனம்

மிஸஸ் & மிஸ்டர்: திரை விமர்சனம்

வனிதா விஜயகுமார் இயக்கி, நாயகியாக நடித்திருக்கும்  மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில்  இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில், வனிதா விஜயகுமாருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்து இருக்கிறார். மற்றும் ,ஷகிலா, செஃப் தாமு, பாத்திமா பாபு, கிரண், ஸ்ரீமான், ஆர்த்தி, கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

கதை:

வித்யா – அருண் தம்பதி, பாங்காக்கில் வசிக்கிறார்கள். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.  இந்த நிலையில், குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார் வித்யா. ஆனால் அருண் தவிர்க்கிறார்.  அதனால் கோபப்பட்டு தனது தாயுடன் இந்தியா வந்து மாமன் வீட்டில் தங்குகிறார் வித்யா. அவர், கர்ப்பமாக இருப்பது தெரிகிறது.

வித்யா குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என அருண் சொல்வதில் ஒரு காரணம் இருக்கிறது.

அது என்ன காரணம், வித்யாவுக்கு குழந்தை பிறந்ததா, தம்பதி இணைந்தார்களா என்பதுதான் கதை.

நாயகியான வனிதா, தனது வயதுக்கேற்ற கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார்.  நாற்பது வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள விரு்பும் ஒரு பெண்ணின் மனதை வெளிப்படுத்தும் கதாபாத்திரம்.  ஆனால் முகம் சுளிக்கவைக்கும் வசனம், காட்சிகள்.  அதுவும், கணவருடன் உறவு வைத்து குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என நினைக்கும் வனிதா ‘விந்தணுவை’ சேமிக்கும் காட்சி… ஓவர்.மனைவி மீது பாசமுள்ள கணவராக ராபர்ட் மாஸ்டர் சிறப்பாகவே நடித்து உள்ளார். தவிர,  ஷகிலா, பாத்திமா பாபு, ஆர்த்தி, கிரண் அனைவரும் ஒரே வயதுடையவர்கள் என்பதை பார்க்கும் போதே உணர முடிகிறது. இந்த நிலையில்,  வனிதாவிற்கு ஷகிலா அம்மாவாகவும், பாத்திமா பாபு தோழியாக வருவதை ஏற்றுக்கொள்ளவே முடிவில்லை.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. இளையராஜாவின் பாடலான, “சிவராத்திரி..” பாடலை எடுத்து பயன்படுத்தி இருக்கிறார்கள். என்ன ஆகப்போகுதோ…

வனிதா நடிப்பு ஓகேதான்.. படத்தைத் தயாரிப்பதும் அவர் விருப்பம். ஆனால் வேறு யாரையாவது கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என வைத்து இருக்கலாம்.

 

Related Posts