மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்: திரைப்பட விமர்சனம்

2k கிட்ஸ்களின் காதல் கதைதான் ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’.
கல்லூரியில் படிக்கும்போது லாஸ்வியாவை, சுற்றிச் சுற்றி வருகிறார் ஹரிபாஸ்கர். அவரை மதிப்பதே இல்லை லாஸ்வியா. சில ஆண்டுகளுக்குப் பிறகு வேலையில்லாமல் இருக்கும் ஹரி பாஸ்கருக்கு லாஸ்வியா வீட்டில் ஹவுஸ் கீப்பிங் வேலை கிடைக்கிறது. மீண்டும் தன் காதலை வெளிப்படுத்துகிறார். அப்போதும் ஹரி பாஸ்கரை அவமானப்படுத்தி வேறு ஒருவரை திருமணம் செய்ய லாஸ்வியா தீர்மானிக்கிறார். அதன் பிறகு ன்ன ஆகிறது என்பதுதான் மீதிக்கதை. ‘ஜம்ப் கட்ஸ்’ யு டியுப் சேனல் மூலம் பிரபலமான ஹரிபாஸ்கர் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். காமெடியில் மட்டுமல்ல.. எமோஷனல் காட்சிகளிலும் சிறப்பாக நடித்து உள்ளார். காதலியை நினைத்து கதறி அழுது சிரிக்க வைக்கும் அவர், பிறகு காதலி தேடி வரும்போது விலகி நின்று கவனிக்க வைக்கிறார்.
நாயகியாக லாஸ்லியா. தன்னைச் சுற்றிச் சுற்றி வரும் நாயகனை புறம் தள்ளுவதாக இருக்கட்டும், தான் காதலித்த நபரின் பின்னணி தெரிந்து அதிர்வதாக இருக்கட்டும் சிறப்பாக நடித்து உள்ளார்.ஓஷோ வெங்கட் இசை குலோத்துங்க வர்மன் ஒளிப்பதிவு ஆகியவை படத்துக்கு பலம். எடிட்டிங்தான் கொஞ்சம் இழுக்கிறது… இருபது நிமிடங்கள் குறைத்து இருக்கலாம்.
இரண்டுஆண்டுகளுக்கு முன், லவ் ஸ்டோரி என்ற 2k கிட்ஸ்களின் லவ் ஸ்டோரியாக வெளியானது. அந்த படம் போலவே, இதுவும்அமைந்திருக்கறது.
தவிர, லவ் யூ மேன் என்று சொல்வதற்கும் ஐ லவ் யூ என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று புது அர்த்தத்தைச் சொல்வதெல்லாம் ஏற்கும்படியாக இல்லை.
காதலிப்பதாக காண்பிப்பது.. பிறகு நட்பு என்பது.. என ஒரு கட்டத்தில் ஆயாசத்தை ஏற்படுத்தி விடுகிறது காட்சிகள்.
டாய்லெட் கழுவியவன், மாச சம்பளத்துக்கு வேலை பார்த்த வேலைக்காரன் என்று சொல்லி கன்னத்தில் அறை விட்ட பிறகும் இன்னொருவனை காதலிக்கிறேன் அவனைத்தான் திருமணம் செய்யப்போகிறேன் என்று சொல்லிவிட்டு பின்னர் அவன் நடத்தை சரி இல்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் செகண்ட் சாய்சாக ஹரி பாஸ்கரை காதலிப்பதாக லாஸ்வியா சொல்வதும் அப்படி சொன்னவுடன் அவரை ஹரி ஏற்றுக் கொள்வதம் ஏற்க முடியவில்லை.