“மகிழ்ச்சி அளித்த ‘மின்மினி’!”: கதிஜா ரஹ்மான்
இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மானின் அறிமுகப்படமான ‘மின்மினி’யில் தனது மாயாஜால இசை மூலம் அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்!
மிகச் சில திரைப்படங்களே சினிமா மற்றும் இசை ஆர்வலர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். அது ஹலிதா ஷமீமின் ‘மின்மினி’ படத்தில் நடந்துள்ளது.
இசையமைப்பாளர் ரஹ்மானின் இசையில் ‘எந்திரன்’ படத்தில் வெளியான ‘புதிய மனிதா…’ பாடலில் கதிஜா பாடகராக தனது மயக்கும் குரல் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இப்போது ஹலிதா ஷமீமின் ‘மின்மினி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். 1992 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ரஹ்மான் ‘ரோஜா’ படம் மூலம் அறிமுகமானார். அவரது மகள் கதிஜா ‘மின்மினி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார். அவரது அற்புதமான பின்னணி இசை மற்றும் மெலோடி பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மான் பேசியிருப்பதாவது, “இதுபோன்ற மனதுக்கு இதமான பாராட்டுக்களைக் கேட்பது எனக்கு மகிழ்ச்சியான அனுபவம். சரியான வழிகாட்டுதலுடன் எனது பலத்தை வளர்த்த என் குடும்பத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் தான் எல்லாப் புகழும். தமிழ்த் திரையுலகில் எனது இசைப் பயணத்தைத் தொடங்க ‘மின்மினி’ போன்ற ஒரு படம் எனக்குக் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தப் படத்தின் எமோஷன் மற்றும் சூழல் எனக்கு சிறந்த இசை அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. இதயத்தைத் தொடும் நல்ல செய்தியுடன் சிறந்த இயக்கமும் ஒளிப்பதிவும் இருப்பது இந்தக் கதையின் பலம். இந்த வாய்ப்பைக் கொடுத்து எனக்கு ஆதரவு கொடுத்து நம்பிக்கையளித்த ஹலிதா ஷமீம் மேம், மனோஜ் பரமஹம்சா சார் மற்றும் முரளி சார் அவர்களுக்கும் எனது பணிவான நன்றிகள்” என்றார்.
‘மின்மினி’ திரைப்படம் மூன்று பதின்ம வயதினரை சுற்றி நடக்கும் ஃபீல் குட் திரைப்படமாகும். இப்படம் இந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9, 2024) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
https://drive.google.com/drive/folders/1xIMmJJDwgHqG8-GJljSANye_te0BdF_-?usp=drive_link
Khatija Rahman – PHOTOGRAPHER CREDITS : KAPIL GANESH