‘ட்ரூ’காலர் பற்றி ‘மெய்’யழகன்!: ட்ரோலர்களுக்கு பதிலடி கொடுத்த கார்த்தி!

‘ட்ரூ’காலர் பற்றி ‘மெய்’யழகன்!: ட்ரோலர்களுக்கு பதிலடி கொடுத்த கார்த்தி!

சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2 டி நிறுவனம் தயாரிக்க, பிரேம்குமார்  இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி வெளியான  ‘மெய்யழகன்’ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிநடை போடுகிறது.

இந்த நிலையில் இன்று  படத்தின் வெற்றி விழா சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.  விழாவில் கலந்து கொண்ட இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன், ” 2டி நிறுவனத்தின் மூலம் தரமான படங்களை மட்டுமே தயாரிப்பதை கொள்கையாக வைத்திருக்கிறோம்!  இந்தப் படத்தை பார்த்த பொதுமக்கள் படத்தை தயாரித்த  எங்கள் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர் இதையே,  இந்த படத்தின் வெற்றியாக நினைக்கிறோம்” என்றார்.

இயக்குனர் பிரேம்குமார், “இந்த மெய்யழகன் திரைப்படத்தை  மெய்யழகனாகவே வர உதவி புரிந்த சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு நன்றி” என்றார். நடிகர் அரவிந்த்சாமி, “இந்த அன்பினை… பாராட்டு மழையை.. எப்படி தாங்கிக் கொள்வது என்று தெரியவில்லை.  உங்கள் அனைவரின் அன்புக்கு நன்றி!   பட வெளியீட்டு  நேரத்தில் நான் வெளிநாட்டில் இருந்தேன். அதனால் எந்த பிரமோஷன் நிகழ்ச்சிகளும் கலந்து கொள்ளவில்லை.. ஆனால் இந்த நன்றி விழாவுக்கு வந்திருக்கிறேன்..  அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் கார்த்தி, “பிரேம்குமார் இயக்கிய 96 படத்தை பார்த்தபோது இவருடன்  பணி புரிய வேண்டும் என ஆசைப்பட்டேன்.  அப்படி ஓர்  உணர்வு பூர்வமான படத்தை  அளித்திருந்தார். அந்த திருப்தி  மெய்யழகன் படத்தில் நடித்த போது  ஏற்பட்டது..

இந்த படத்தின் தயாரிப்பாளர் என் அண்ணி ஜோதிகா,  படத்தை பார்க்கவில்லை!  ‘தயாரிப்பாளர் இன்னும் பார்க்கவில்லையே’  என அவரை கேட்டேன். அதன் பிறகு பார்த்துவிட்டு என்னை மிகவும் பாராட்டினார். ‘கமர்சியல் படங்களை மீறி இது போன்ற தரமான படங்களில் நடிக்க வேண்டும்” தெரிவித்தார் என் அண்ணி ஜோதிகா.

படத்தின் முக்கியமான காட்சி மெய்யழகன் பெயரை மறந்துவிட்ட அவரது  அத்தான் அரவிந்தசாமி  தவிப்பதுதான்.  இதை கிண்டலடித்து பலர்  மீம்ஸ் போட்டனர்.

‘ட்ரு காலர் மூலம்  மெய்யழகனை பெயரைக் கண்டுபிடித்திருக்கலாம்.. அல்லது யாரிடமாவது கேட்டிருக்கலாம்’ என்றனர்.

ஒரு விசயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்…

தனக்கு நெருக்கமான – தன்னை நேசிக்கும் –  ஒருவரின் பெயரை மறந்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் அரவிந்த்சாமி குமைவதும்,   சம்பந்தப்பட்டவரிடம் ர் மனதார மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே உணர்ச்சிபூர்வமான காட்சி. அவன் பெயரை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திலே தன் ஒரு பகல் பொழுதை கழிக்கிறார்.. அதுதான் இந்தப் படத்தில் வெற்றி” என்றார்.

 

 

Related Posts