எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்து மரணம்!

எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்து மரணம்!

பிரபல நடிகராக விளங்கிய மாரிமுத்துவின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குநராக திரையுலகில் கால் பதித்த மாரிமுத்து பல்வேற படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதோடு, எதிர் நீச்சல் தொடரில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. மேலும் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்திலும் நடித்தார்.

எதிர் நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற பெயரில் மதுரை தமிழில் பேசி மக்களை கவர்ந்தார்.

இந்நிலையில் வழக்கம் போல, இன்று அதிகாலையே டப்பிங் பேசு சென்றார். பேசிக்கொண்டு இருக்கும்போதே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனடியாக, அவரே காரை எடுத்துக்கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்றார்.   அங்கு சிகிச்சை பலனளிக்காமல்,  8.30 மணிக்கு மறைந்தார்.

 

 

Related Posts