என்ன சொல்கிறது மாஃபியா’ திரை விமர்சனம்!
அருண் விஜய் தனது படங்கள் சில தோல்வியில் முடிந்தாலும் தொடர் முயற்சியால் யாரும் எதிர் பார்க்காத வெற்றியை கொடுத்துவருகிறார்.அதற்கு சான்றாக “மாஃபியா” படம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்றுள்ளது. “மாஃபியா” ரிலீஸ் அன்று சென்னையில் எஸ்.பி.ஐ சினிமாஸ், கே.ஜி சினிமாஸ் அரங்குகளில் ரசிகர்களை நேரடியாக சந்தித்து, அவர்களது அன்பில் மிதந்தவர்.
இப்போது படத்தை பார்போம்…
இந்தப் படத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றும் நாயகன் ஆர்யாவான (அருண் விஜய்). அவருடன் சத்யாவும் (பிரியா பவானிசங்கர்) வருணும் பயணிக்கிறார்காள்.
போதைப் பொருளைத் தடுக்கும் பணியில் இருக்கும் ஆரியாவின் பிடியில் சின்னச் சின்ன ஆட்களே சிக்குகிறார்கள். அந்த கூட்டத்தின் தலைவன் யார்? எங்கு இருக்கிறான்’, எப்படி பிடிப்பது என கதை நகர்கிறது. அவனைப்பிடிப்பது கடினமாகிக் கொண்டே போகும் வேலையில் போதைப் பொருள் பிரிவின் உயர் அதிகாரியும், சமூக ஆர்வலராக வரும் தலைவாசல் விஜய் ஆகியோர் கொல்லப்படுகிறார்கள்.
இதையடுத்து, போதைப் பொருள் தலைவனான திவாகரை [நடிகர் பிரசன்னாவை] திட்டம்போட்டு நெருங்குகிறார் நாயகன் ஆர்யா. அதற்குள் திவாகர் ஆர்யாவின் குடும்பத்தினரைக் கூண்டோடு கடத்திவிடுகிறார். குடும்பத்தினரை மீட்டாரா’ போதைப் பொருள் கும்பலின் பின்னணியில் யார் இருப்பது என்பதுதான் மீதிக் கதை.
த்ரில்லர் படம் என்பதால் விறுவிறுப்பு, வேகம் எதிர்ப்பார்ப்பு இருக்கும். ஆனால் கதைக்கெற்ற வேகம் சற்று குறைந்தே காணப்படுகிறது. படத்தின் முதல் பாதி கொஞ்சம் சலிப்பு ஏற்படுத்துவது போல் தோன்றுகிறது. போதைப் பொருள் கடத்தல் தலைவனாக பிரசன்னா கதாபாத்திரத்துடன் நெருக்கமாகவே இருக்கிறார்.
எந்தத் திருப்பமும் இல்லாத திரைக்கதை என தோன்றினாலும்’ மீதி பாதி திடீர் திருப்பம் ஏற்படுகிறது படம் கொஞ்சம் சூடுபிடிக்கிறது. கதாநாயகன் போதைப்பொருள் தலைவனை கண்டுபிடிக்கவில்லை என்றாலும் சமூக ஆர்வலர் ஒருவர் கண்டுபிடித்துவிடுகிறார்.
எல்லாப்படத்திலும் போல, கதாநாயகன் வில்லனுடைய இடத்திற்குச் சென்று போதைப் பொருள்களை எடுத்து வந்துவிட, கூட்டத்தின் தலைவன் நாயகனின் பெற்றோரைக் கடத்திவிடுகிறான். நீண்ட போராட்டத்திற்கு பிறகு சண்டைப் போட்டு அவர்கள் மீட்கிறார் நாயகன்.
இந்தப் படத்தில் நிறைய, ஸ்லோமோஷன் காட்சிகள் அமைந்தது ரசிகர்களிடையே சலிப்பை ஏற்படுத்துகிறது. படத்தில் ஒளிப்பதிவு பாராட்ட வேண்டிய விஷயம். படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சிவரைக்கும் சூப்பராக கொண்டுசெல்கிறார் கோகுல் பினோய்.
பின்னணி இசையைப் பொறுத்தவரையில் பரவயில்லை ரசிக்கவைக்கிறது. நாயகன் அருண் விஜய் ரொம்ப மெனக்கெட்டு நடித்திருக்கிறார். அவரது லுக் சூப்பர்’ குறை கூறும்படி எதுவும் இல்லை அருமை.
பார்த்து ரசிக்கலாம்.