தி.மு.க. வாங்கிய கடனுக்கு அ.தி.மு.க. வட்டிகட்டுகிறது அமைச்சர் ஜெயகுமார்!
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அவர் தொடங்கி வைத்த மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி அவரது பிறந்த நாளில் அரசு மருந்த்துமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆண்டுதோரும் வழங்கபடும். இந்த பிறந்தாளிலும் அமைச்சர் ஜெயக்குமார் ஜெயலலிதா பிறந்தநாளான இன்று பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்தார்.
மேலும் அவர் தமிழக அரசு கடன் வாங்கி கொள்ளை அடிக்கவில்லை என்றும்’ கடன் வாங்கி மூலதனமாக பயன்படுத்துகிறோம். திமுக ஆட்சி போல ஊதாரித்தனமாக செலவிடவில்லை.
தி.மு.க. ஆட்சியில் வாங்கிய ரூ.1 லட்சம் கோடி கடனுக்கு அ.தி.மு.க. அரசு இதுவரை வட்டி கட்டி வருகிறது.
தி.மு.க. ஆட்சி ஊதாரித்தனமாக செயல்பட்டது. நாங்கள் அப்படியில்லை’ தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விரக்தியில் இருக்கிறார். என்ன செய்வது என்று தெரியாமல் ஆட்சியை எப்படி கவிழ்க்கலாம், குறைகூறலாம் மக்களிடம் இருக்கும் நற்பெயரை எப்படி கெடுப்பது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார்.
2021 தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம். தி.மு.க. தனது ஆட்சியில் தமிழக உரிமைகளை விட்டு கொடுத்து அவர்களது குடும்பத்துக்கு மட்டுமே நன்மை செய்துகொண்டது. நிர்பயா நிதியை பயன்படுத்தி தான் அரசு பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது, நிர்பயா நிதியை மாநில அரசு முழுமையாகவும் சரியாகவும் பயன்படுத்தி வருகிறது என்றார்.