‘RX’: லோகேஷ் கனகராஜ் – மைத்ரி மூவிஸ் கூட்டணியில் மிரட்டலான மெடிக்கல் த்ரில்லர்!
இந்திய சினிமா ரசிகர்களின் மனதை ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘ஜீ ஸ்குவாட்’ நிறுவனமும், முன்னணி தயாரிப்பு நிறுவனமான ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தமிழில் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஆர் எக்ஸ் – RX’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளன.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம், ஒரு விறுவிறுப்பான டிராமா திரில்லராக தயாராகி வருகிறது. இப்படத்தில் நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளனர்.
மருத்துவர்கள் நோயாளிகளை பரிசோதித்து மருந்து பரிந்துரைக்கும் பிரஸ்கிரிப்ஷனில் இடம்பெறும் ‘RX’ என்ற குறியீட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது இப்படத்தின் தலைப்பு. இப்படத்தில் மெடிக்கல் மாஃபியா பின்னணியிலான பலிரெண்டு திரில்லர் சம்பவங்கள் இடம்பெறக்கூடும் என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கதையின் நாயகியான ரெஜினா கசாண்ட்ரா முக கவசத்துடன் தீர்க்கமான பார்வையிலும், செகண்ட் லுக்கில் ரயிலில் பயத்துடன் பயணிப்பது போன்ற தோற்றத்திலும் இடம்பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். ஹரிஹரன் ராஜு கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ஆஷாமீரா ஐயப்பான் வசனம் எழுதியுள்ளார். செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்ய, ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். மேலும் பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பையும், மனோஜ் குமார் ஆர்.கே. தயாரிப்பு வடிவமைப்பையும் கவனித்துள்ளனர். ஜீவா காருண்யா ஆடை வடிவமைப்பு செய்துள்ள இப்படத்தின் பாடல்களை கார்த்திக் நேத்தா மற்றும் விஷ்ணு எடவன் எழுதியுள்ளனர். ஒலி வடிவமைப்பு பணிகளை அருண் எஸ். மணி மேற்கொள்ள, எம்.ஆர். ராஜகிருஷ்ணன் ஒலிகலப்பு செய்துள்ளார்.
விஜய் ராஜ் ஒப்பனை பணிகளை கவனிக்க, ஜி.இ. அசோக் குமார், வி.எப்.எக்ஸ். மேற்பார்வையாளராகவும், ‘மேங்கோ போஸ்ட்’ நிறுவனம் டி.ஐ. மற்றும் வண்ணத் திருத்த பணிகளையும் கவனித்துள்ளன. வியாகி நிறுவனம் விளம்பர வடிவமைப்பைச் செய்துள்ளது.
ஒய். ரவி சங்கர், நவீன் யெர்னேனி மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். இவர்களுடன் இணைத் தயாரிப்பாளராக பிரதீப் பூபதி, தலைமைச் செயல் தயாரிப்பாளராக ஏ.ஜெய்சம்பத், தயாரிப்பு நிர்வாகியாக பி. எல். பாலாஜி மற்றும் தயாரிப்புக் கட்டுப்பாட்டாளராக எம். கோவிந்தராஜ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
இப்படத்தின் மக்கள் தொடர்பு பணிகளை சுரேஷ்சந்திரா மற்றும் திரு ஆகியோர் கவனித்து வருகின்றனர்.
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

