மரகத நாணயம் 2: மீண்டும் மிரட்ட வரும் சாபக் கல்! 

மரகத நாணயம் 2: மீண்டும் மிரட்ட வரும் சாபக் கல்! 

பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி மற்றும் ஆர்டிசி மீடியா ஆகிய முன்னணி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் முதல் பார்வை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செம ட்ரீட்டாக வெளியாகியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியாகி  மாபெரும் வெற்றியைப் பெற்றது ‘மரகத நாணயம்’. ஒன்பது ஆண்டு இடைவெளிக்குப் பின் தயாராகி உள்ள இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவன்  இரண்டாம் பாகத்தையும் எழுதி இயக்கி உள்ளார்.

 முதல் பாகத்தில் நடித்த ஆதி, பிரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி, டேனியல் ஆனி போப், முனிஷ்காந்த், அருண்ராஜா காமராஜ், ஆனந்தராஜ் மற்றும் முருகானந்தம் உள்ளிட்ட அனைத்து முக்கிய நடிகர்களும் இந்த இரண்டாம் பாகத்திலும் மீண்டும் இணைந்துள்ளனர்.

திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை தீபக் டி. மேனன் மற்றும் பி.வி. சங்கர் இணைந்து மேற்கொள்கின்றனர்.  கலை இயக்கத்தை என்.கே. ராகுலும், படத்தொகுப்பை திருமலை ராஜனும் கவனித்துள்ளனர்.  ராஜேஷ் கண்ணன் வசனம் எழுதியுள்ளார்.

 இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன் உற்சாகத்துடன் கூறுகையில்,  “முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இதிலும்  எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பது திரையில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு மெகா சர்ப்ரைஸாக இருக்கும்.

மேலும், முதல் பாகத்தில் ரசிகர்கள் கொண்டாடிய அதே நகைச்சுவை, சாகசம் மற்றும் ஆக்‌ஷன் அம்சங்கள் இரண்டாம் பாகத்திலும் குறையாது. தவிர, இன்னும் பல சுவாரஸ்யமான ஆச்சரியங்களும் காத்திருக்கிறது. குறிப்பாக, முதல் பாகத்தில் நிக்கி கல்ராணியின் கதாபாத்திரம் எவ்வளவு பேசப்பட்டதோ, அதேபோல் இப்பாகத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

இத்திரைப்படத்தை சுதன் சுந்தரம், தேவ், கே.வி. துரை, மனிஷ் சிங்கள் மற்றும் துர்கம் சௌத்ரி ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர்.

படத்தின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts