மத அரசியல்! எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ‘லால் சலாம்’ இன்று ரிலீஸ்!

மத அரசியல்! எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ‘லால் சலாம்’ இன்று ரிலீஸ்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்று (பிப்.9) திரையரங்குகளில் ரிலீசாகிறது.

விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். இவர்களுடன் தான்யா பாலச்சந்திரன், நிரோஷா, தம்பி ராமையா, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மொய்தீன் பாய் என்ற மும்பை கேங்ஸ்டராக இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3, வை ராஜா வை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள மூன்றாவது படமாக லால் சலாம் உருவாகியுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து மத அரசியல் குறித்து பேசும் படமாக லால் சலாமை இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதனால் வசனங்களில் மத அரசியல் குறித்து அதிகம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

படத்துக்கு சென்சாரில் யூ/ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.

முன்னதாக லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி குறித்து ஐஸ்வர்யா பேசியது வைரலானது. தன் அப்பா ரஜினி சங்கி இல்லை என்றும், அடிக்கடி இதனை கேட்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும், ரஜினி சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் போன்ற படத்தில் நடித்திருக்க மாட்டார் எனவும் பேசியிருந்தார்.

தொடர்ந்து ரஜினி, “சங்கி என்றால் தரக்குறைவான வார்த்தை என ஐஸ்வர்யா கூறவில்லை” என்றார்.

இதெல்லாம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்த நிலையில் இன்று உலகம் முழுதும் திரையரங்குகளில்  லால் சலாம் வெளியாகிறது.

Related Posts