“சினிமாவில் ஜெயிப்பது முக்கியம்… ஆனா நிலைப்பது…?”: ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ பிரஸ் மீட்டில் சூரி!
‘J4 ஸ்டுடியோஸ்’ ஜெபா தயாரிக்க, ஜே.சுரேஷ் இயக்கத்தில் புகழ், மிஸ்டர் ஜூ கீப்பர் இயக்கத்தில், புகழ் – ஷிரின் காஞ்ச்வாலா ஜோடியாக நடிக்கும் படம், ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு மார்ச் 20 முதல் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரே கட்டமாக பெரும்பாலான காட்சிகளை படமாக்கி விட்டனர் படக்குழுவினர். அதையடுத்து பிலிப்பைன்ஸில் படப்பிடிப்பு நடந்தது.
படம் விரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் நடிகர் சூரி கலந்து கொண்டார். அப்போது அவர், “சினிமாவில் வெற்றி பெற்ற பலரும் கஷ்டப்பட்டுதான் வந்திருக்கிறார்கள். அதைப் போல நானும் கஷ்டப்பட்டுதான் வந்திருக்கிறேன். சினிமாவில் ஜெயிப்பது முக்கியம். ஆனால் நிலைப்பது அதை விட முக்கியம்” என்றார்.
