இயக்குனர் சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ சாதனை!

இயக்குனர் சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ சாதனை!

தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை’ ‘மாமனிதன்’ ஆகிய வெற்றி படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படம் வெளியானது.

இந்த படத்தில் யோகி பாபு, ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்து உள்ளார்.

கிராமத்துக் கதைக்களத்தில் அண்ணன் – தங்கை உறவைப் பேசும் படமாக உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களிலும் அங்கீகாரம் பெற்றது.

இப்படத்தின், ‘காத்திருந்தேன்’, ‘பொன்னான பொட்டப்புள்ள’ , ‘தேவதை’ , ‘கையேந்தி நிற்பான்’ என்ற பாடல்களும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தன.

இந்நிலையில் படம், சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. அதில் அகில இந்திய அளவில் ஆறாம் இடத்தைப் பெற்று சாதனை புரிந்து உள்ளது.

 

Related Posts