‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ விஜய் ஆண்டனி! அதிர வைக்கும் ‘கொலை’!

‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ விஜய் ஆண்டனி!  அதிர வைக்கும் ‘கொலை’!

சின்னத்திரையில் இசையமைப்பாளராக தன் பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி, விஜய் நடித்த சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் பலரின் படங்களுக்கும் இசையமைத்த அவர், 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நான்’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அடுத்த பரிமாணத்தை தொடங்கினார். இதனையடுத்து சலீம், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, பிச்சைக்காரன் 2 என ஏகப்பட்ட படங்களில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

மிரள வைக்கும் கொலை படத்தின் ட்ரெய்லர்
இதனிடையே அடுத்ததாக விஜய் ஆண்டனி ‘கொலை’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 21 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய் ஆகியோரும் கொலை படத்தில் இணைந்துள்ளனர். சிவக்குமார் விஜயன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.கடந்த ஆண்டு கொலை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் மேக்கிங், வசனங்கள் ஹாலிவுட் தரத்தில் இருந்ததைக் கண்டு ரசிகர்கள் மிரண்டு போயினர். இப்படியான நிலையில் கொலை படத்தின் இறுதியான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

எதிர்பார்ப்பை எகிற செய்யும் காட்சிகள்
எவ்வளவு தான் வாழ்க்கையில் ஜெயிச்சாலும் சாவு கிட்ட நிச்சயம் தோத்து தான் போவோம் என்ற வசனத்துடன் இப்படம் தொடங்குகிறது. இதில் விஜய் ஆண்டனி துப்பறியும் நிபுணராகவும், ரித்திகா சிங் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். காட்சிகளும் வழக்கமான தமிழ் சினிமாவைப் போல இல்லாமல் வித்தியாசமாக உள்ளது.நிச்சயம் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என விஜய் ஆண்டனி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.