கிட்டி: காந்தி ஜெயந்தி அன்று வெளியாகும் அதிரடி சைக்காலஜி த்ரில்லர்!

கிட்டி: காந்தி ஜெயந்தி  அன்று வெளியாகும் அதிரடி சைக்காலஜி த்ரில்லர்!

ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் திருமாறன் தயாரிப்பில், இயக்குனர் நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் உருவமாகியுள்ள சைக்காலஜி த்ரில்லர் திரைப்படம் ‘கிட்டி’. இத்திரைப்படம் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலரைப் போல, தமிழ் சினிமாவில் முற்றிலும் வித்தியாசமான மற்றும் பரபரப்பான திரைக்கதையைக் கொண்ட திரைப்படங்கள் வருவது அரிதாகிவிட்டது. வணிகரீதியான வழக்கமான படங்களைப் பார்த்து அலுத்துப் போன ரசிகர்களுக்கு, ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது ஒரு செறிந்த த்ரில்லர் அனுபவம் கிடைக்காதா என்ற ஏக்கம் எழுவது இயற்கை. அந்த எதிர்பார்ப்பை அணுவணுவாகப் பூர்த்தி செய்யும் வகையில், விறுவிறுப்பான கதைகளத்துடன் உருவாகியுள்ளது ‘கிட்டி’.

நம்மைச் சுற்றி நடக்கும் குற்றங்களை யார் செய்தார்கள் என்று வழக்கமான பாணியில் புலனாய்வு செய்யும் பார்முலாவை உடைத்து, கதை நாயகனைச் சுற்றியே பின்னப்பட்டுள்ள புதிரான திரைக்கதையால் இயக்குனர் நெடுமாறன் மோகன்தாஸ் தனித்து நிற்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் படைப்பிலும், நடிகர்கள் தேர்விலும் அவர் காட்டியுள்ள அக்கறை படத்திற்குப் பெரிய பலம்.

மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ள ‘முருகா’ அசோக்கிற்கு இத்திரைப்படம் திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். இயக்குனர் செதுக்கிய விதமும், அசோக் அதைத் திரையில் பிரதிபலித்த விதமும் நிச்சயம் பேசப்படும். இப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவின் பிசியான நடிகர்கள் பட்டியலில் அவர் இடம் பிடிப்பார்.

படத்தில் நாயகனுக்கு ஜோடியாக நிஷா, சங்கவி, சிமு அத்வானி என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். ‘ஊமை விழிகள்’ பட இயக்குனர் ஆர். அரவிந்த்ராஜ் திருப்புமுனை கதாபாத்திரத்திலும், பிரபல நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் திருமாறன் கம்பீரமான காவல் அதிகாரியாகக் களம் இறங்கியுள்ளார். Kumbakonam, Cuddalore, Tharangambadi மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

தொழில்நுட்பக் குழு:

  • இசை: காதர்

  • ஒளிப்பதிவு: வி.எஸ். வேலன்

  • படத்தொகுப்பு: கார்த்திக் பாண்டியன்

  • சண்டைப்பயிற்சி: ‘பாப்புலர்’ பாபு

  • நடனம்: ராக் சங்கர்

  • பாடல்கள்: ப்ரியன், சீர்காழி சிற்பி, தமிழ்மகன்

  • கலை: வாலி

  • மக்கள் தொடர்பு: சரண்

  • கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: நெடுமாறன் மோகன்தாஸ்

  • தயாரிப்பு: திருமாறன் (ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ்)

அக்டோபர் 2 அன்று காந்தி ஜெயந்தி வெளியீடாக உலகெங்கும் திரைக்கு வரும் ‘கிட்டி’, த்ரில்லர் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக அமையும்!