ஜி.வி. பிரகாஷின் ‘கிங்ஸ்டன்’ !: ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப்படம்! : ரசிகர்கள் கொண்டாட்டம்!

இசையில் முத்திரை பதித்த ஜி.வி.பிரகா2ஷ்குமார், ‘டார்லிங்’ எனும் பேய் படத்தின் மூலம் ஹீரோவாக தடம் பதித்தார். அந்த முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகும் குறிப்பிடத்தக்க வகையில் பல படங்களில் நடித்தார்.
படம் குறித்து வெளியான செய்திகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
“தூத்துக்குடியில் உள்ள மீனவ கிராமத்தின் வலிகளை கொண்டு உருவாக்கப்பட்ட படம். இந்திய சினிமாவில் பார்க்காத விஷயம் இந்த படத்தில் அமைந்துள்ளது. இது ஒரு திகில் சாகச படம்” என்ற தகவல் வெளியானது.
ஜி.வி.பிரகாஷும், “இதுவரைக்கும் கடலுக்குள் யாரும் படம் எடுத்ததில்லை. கடலுக்கு அடியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் பிரம்மாண்டமாக கிங்ஸ்டன் இருக்கும். இந்திய சினிமாவில் இது ஒரு புது அனுபவமத்தைத் தரும். ஒரு மீனவ கிராமத்தால் மீன் பிடிக்க உள்ளே போக முடியாது. அதன் வலிகளை கொண்டு உருவாக்கப்பட்ட கதையாக இந்தப் படம் உள்ளது.
ஹாலிவுட் திரைப்படத்தில் கடல் கொள்ளையர்கள் பற்றி எடுப்பார்கள், ஆனால் இந்த படம் தூத்துக்குடி பக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு கிராமத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி எடுத்துள்ளோம். இது காதல், காமெடி, பேய் படம் கிடையாது. இதில் எல்லாமே புதுமையாக இருக்கும். இந்தக் கதை நான்காம் பாகம் வரை உள்ளது. பெரிய கதையாக இருக்கிறது. இந்த படத்தில் உள்ள கதாபாத்திரங்களில் சார்ந்தவர்களை கொண்டு படத்தின் பெயர் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதுவும் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
தவிர, ஏற்கெனவே திவ்யபாரதியுடன் இணைந்து அவர் நடித்த பேச்சுலர் படத்தை இளைஞர்கள் கொண்டாடி தீர்த்தனர். அதே ஜோடி இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.
படம் இன்று வெளியான நிலையில், ட்விட்டரில் பலரும் படத்தை வரவேற்று பதிவிட்டு வருகின்றனர்.திரைப்பட விமர்சகரும் பாக்ஸ் ஆபீஸ் டிராக்கருமான ரமேஷ் பாலா இப்படத்துக்கு 3.75 ரேட்டிங் கொடுத்திருக்கிறார்.
“ஜி.வி. பிரகாஷ் குமாரின் நடிப்பு சிறப்பாக உள்ளது. படத்தின் முதல் பாதி முழுவதும் கதையை செட் செய்ய 2ம் பாதி தான் கடல் பேய்களை காட்டி இயக்குநர் கதறவிடுகிறார். ஜி.வி மற்றும் திவ்யபாரதி மிரட்டிட்டாங்க” என பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
மேலும், “ஹாலிவுட் தரத்தில் ஒரு தரமான பேய் படமாக கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் கொடுத்திருக்கிறார். புதுவிதமான இந்த முயற்சி நிச்சயம் ரசிகர்களை தியேட்டர்களில் அட போட வைக்கும் என்பது உறுதி” என்று இந்த விமர்சகர் 3.5 ரேட்டிங் கொடுத்துள்ளார். முதல் பாதி முழுவதும் எமோஷனலாகவும் 2ம் பாதியில் இருந்து ஹாரர் படமாகவும் பிரித்து கொடுத்துள்ள விதம் அருமை என்கிறார்.
ரசிகர்களும், “ஜி.வி. பிரகாஷ் இந்த படத்தில் நடிகரகாவும் இசையமைப்பாளராகவும் தனது ஒட்டுமொத்த உழைப்பை சிறப்பாகவே கொடுத்துள்ளார். அதிலும், “கடலுக்கு நான் கிங்குடா” என வரும் வசனம் எல்லாம் கூஸ்பம்ப்ஸ் மொமண்ட். கண்டிப்பாக இப்படியொரு பேய் படத்தை தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் ” என்று பதிவிட்டு உள்ளனர்.