துணிச்சலான கதையில் கயல் ஆனந்தி.. அதிரவைக்கும் ‘மங்கை’ ட்ரெய்லர்!

ஜே எஸ் எம் பிக்சர்ஸ் தயாரிக்க, குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் மங்கை படம் உருவாகி இருக்கிறது. கயல் ஆனந்தி, ராம்ஸ், துஷி, ஆதித்யா கதிர் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
இந்நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று உள்ளது.
ஆண்களால் பெண் எப்படி பார்க்க படுகிறாள் என்பதையும், ஒரு துணிச்சலான பெண் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்பதையும் உணர்த்தும் அதிரடி திரைப்படமாக மங்கை உருவாகி இருக்கிறது என்பதை டிரெய்லர் வெளிப்படுத்துகிறது.
தைரியமான பெண்ணாக, அதிரடி வேடத்தில் கயல் ஆனந்தி நடித்துள்ளார்.
மொத்தத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை டிரெய்லர் அதிகரித்து உள்ளது.
இந்த படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.