ஸ்டார் விமர்சனம்

ஸ்டார் விமர்சனம்

கடந்த வருடம் கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த நிலையில்தான் இன்று அவரது நடிப்பில் ஸ்டார் திரைப்படம் வெளியாகிறது.

சினிமா ஹீரோ ஆக வேண்டும் என்கிற துடிப்பில் இருக்கிறார்கலை என்கிற கதாபாத்திரத்தில் வரும் கவின். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக,  விபத்தில் சிக்குகிறார். இதனால் காரணமாக முகத்தில் காயம் ஏற்படுகிறது. தனது ஹீரோ கனவு கனவு சுக்குநூறாக உடைந்துவிட்டதாக குமுறுகிறார்.

குடும்பத்துக்காக வேலைக்கு செல்கிறார்.

அவரது ஹீரோ கனவு நிறைவேறியதா என்பதுதான்  ஸ்டார் படத்தின் கதை.நடிப்பில் ஜொலிக்கிறார் கவின். ஆரம்பத்தில் பள்ளி மாணவனாக சைக்கிளில் வந்து கெத்தாக இறங்கும் காட்சியில் இருந்து அவரது அதகளம் ஆரம்பிக்கிறது. முதல் பாதியில் ஜாலி பையனாக வலம் வரும் அவர், அதன் பிறகு விபத்தில் சிக்கி வீட்டில் முடங்கிக் கிடக்கும் காட்சிகளிலும் நடிப்பில் அசத்துகிறார்.

குறிப்பாக, ‘நடிப்பு வரலை’ என்று போனில் அழுவது, அதே நேரம், ‘இந்த மூஞ்சி நடிக்கிறதை பார்ப்பீங்க’ என சவால் விடுவது.. ஆகிய காட்சிகளைச் சொல்லலாம்.கவின் அப்பாவாக வரும் லால், வழக்கம்போல் இயல்பாக நடித்து கவர்கிறார். தன்னால் சாதிக்க முடியாததை தனது மகனை வைத்து சாதிக்கத் துடிக்கும் பாசக்கார அப்பாவை கண் முன் நிறுத்துகிறார்.

கவினின் அம்மாவாக வரும்  கீதா கைலாசமும் பாந்தமான நடிப்பு.

இரண்டு நாயகிகளும் பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை அளித்து இருக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜாவின் இசை ஈர்ப்பு. பாடல்களும், பின்னணி இசையும் கவர்கின்றன. ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவை படத்துக்கு பலம்.அந்த 3 சர்ப்ரைஸ் காட்சிகளும், கிளைமேக்ஸ் காட்சியில் வரும் அந்த ட்விஸ்டும் அதிரடியாக உள்ளன.

மொத்தத்தில்,  குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய படம், ஸ்டார்.