கதிர் ஆனந்த் MP தலைமையில் 645 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!

கதிர் ஆனந்த் MP தலைமையில் 645 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!

கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலத்தேரி, செஞ்சி, வடுகந்தாங்கள், பில்லாந்திப்பட்டு,கே.வி.குப்பம், கொசவன்புதூர், வேப்பங்கனேரி ஆகிய மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 645 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
கே.வி.குப்பம் ஒன்றியக்குழுத் தலைவர் L.ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக  வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர் திரு.D.M.கதிர் ஆனந்த் MP அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி மற்றும் கண்ணொளி திட்டம் மூலம் மூக்கு கண்ணாடி வழங்கினார்.ஒன்றிய கழக செயலாளர்கள் சீதாராமன், முருகேசன் ஊரகஉள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஆசிரியர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கழக தோழர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்

Related Posts