கங்கனா ரணாவத் நடிப்பில்  ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ’பங்கா’!

கபடி விளையாட்டை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள படம் பங்கா ’’ இப்பபடத்தில் நடிப்பதற்காக கங்கனா கடுமையாக கபடி பயிற்சி  மேற்கொண்டு நடித்துள்ளார். இவருடன் ஜஸ்ஸி கில், நீனா குப்தா, பங்கஜ் திரிபாதி, ரிச்சா சத்தா, யோக்யா பாஷின்  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி கூட்டணியில்

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சங்கர் எஷான் லாய் குழு இசையமைக்கிறது. ஜே ஐ பட்டேல் ஒளிப்பதிவு செய்கிறார்.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த  பெண் கபடி ஆர்வத்தால் அவர் வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றங்கள் நடக்கின்றன என்பதை சொல்லும் படம் .

இந்தப் படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

 

Related Posts