ஐயோ.. மறந்துட்டேன்! குழம்பிய செல்லூர் ராஜூ

சென்னை: நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தமிழகத்தை பொருத்தவரை எல்லா மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருப்பதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆகியோரே முக்கிய காரணம் என்றார். அவரது கட்சித்தலைர் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை மறந்துவிட்டார்.  இதை கவனித்த அதிமுகவினர் செய்தியாளர் சந்திப்புக்கு பின் அண்ணே அம்மா பெயரை விட்டுடிங்க என எடுத்து சொல்ல!

 ஐயோ ஆமம்! என அதிர்ச்சியடைந்தார்.  மீண்டும் ஒரு பேட்டி கொடுக்க செய்தியாளர்களை அழைத்த போது அங்கு யாரும் இல்லை எல்லோரும் சென்றுவிட்டனர்.

பெரியார் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை தமிழக பாஜக ட்வீட் செய்த நிலையில், இது தொடர்பாக மதுரையில் நேற்று பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழகம் என்றுமே திராவிடர்களின் பூமி. சுயமரியாதை இயக்கத்தை வித்திட்டவர் பெரியார் ஆவார் என சொல்லியிருந்தார்.

இன்று தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக உறவினர் போல் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆகியோர்களே காரணம் என்றார். இதில் குறிப்பிட்டு சொல்வது என்னவென்றால் அவர் ஜெயலலிதாவின் பெயரை கூறாமல் விட்டதுதான்.
அதிமுக நிர்வாகிகள் சிறிது நேரம் குழப்பத்தில் இருந்தனர். அமைச்சர் எப்போதுமே மறந்துவிடுவது அல்லது சம்பந்தம் இல்லாமல் பேசுவது இதே வழக்கம் என கிசுகிசுத்துக் கொண்டனர்.