‘கண்மணி அன்போட…’: மீண்டும் திரைக்கு வருகிறது ‘குணா’!

‘கண்மணி அன்போட…’: மீண்டும் திரைக்கு வருகிறது ‘குணா’!

கடந்த 1991ம் வருடம் சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ‘குணா’.

அப்போது நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வணிகரீதியாக வெற்றி பெறவில்லை. இந்த படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற ‘ கண்மணி அன்போடு’ பாடல் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் ரசிகப்படுகிறது.

தற்போது குணா படத்தை ரசிகர்கள்கொண்டாடி வருகின்றனர்.  சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ படமே உதாரணம். இந்த நிலையில் குணா திரைப்படம் கிட்டத்தட்ட 33 வருடங்களுக்குப் பிறகு மீண்டும்  வருகின்ற நவம்பர் 29ம் தேதி அன்று ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

 

Related Posts