“விமர்சனங்கள் வேண்டும்!”: ‘சைலண்ட்’ பட விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி
எஸ்.ஆர். ட்ரீம் ஸ்டூடியோஸ் சார்பில், எஸ்.ராம் பிரகாஷ் தயாரிக்க, கணேஷா பாண்டி இயக்கத்தில், டி. சமய முரளியின் திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம், “சைலண்ட்”. படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், “திருநங்கைகள் பற்றி நிறையச் சர்ச்சைகள் இருக்கின்றன. அவற்றைத் தெளிவாக்குவது போல் இந்தப்படம் இருக்கும். திருநங்கை வாழ்வைப் போற்றும் படமாக இருக்கும்” என்றார்.
திருநங்கை நமீதா, “திருநங்கைகள் வாழ்க்கையை எடுத்துக்கூறும் கதை என்று சொன்னார்கள். அதனால் உடனே ஒப்புக்கொண்டேன். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி” என்றார்.
இசையமைப்பாளர் சமய முரளி, “இந்தப்படத்தில் மூன்று பாடல்கள் ஆனால் ராகம் கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் இசையமைத்துள்ளேன் இயக்குநர் நன்றாக இருப்பதாக பாராட்டினார்” என்றார்.
இயக்குநர் கணேஷா, “சைலண்ட் என் முதல் குழந்தை. இந்த தலைப்புக்கும் எனக்கும் நிறையப் பந்தம் இருக்கிறது. சின்ன வயதில் அதிகம் பேச மாட்டேன், அதன் பிறகு வறுமை, அதன் பின் போராட்டம் இந்த அனைத்துக்கும் இந்த சைலண்ட் பதிலாக இருக்கும்” என்றார்.
இயக்குநர் கணேஷ் கே பாபு, ” இப்படத்தை ரிலீஸ் செய்யும் ராஜா சேதுபதி என் நண்பர், அவர் சினிமாவை மிகவும் நேசிப்பவர். அவர் ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார் என்றால் கண்டிப்பாக நல்ல படமாகத்தான் இருக்கும். இயக்குநர் கணேஷா பாண்டி மிக நன்றாக இயக்கியிருக்கிறார். மிக நன்றாக நடித்துள்ளார். பட்ஜெட் கேட்டேன் நம்ப முடியவில்லை. சின்ன பட்ஜெட்ட்டில் மிக நன்றாக எடுத்துள்ளார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “இந்தப்படத்தை நான் பார்த்து விட்டேன். அருமையான படம். இப்படத்திற்கு இசையமைத்துள்ள சமயமுரளி எனக்கு நண்பர். அவர் ஒரு அரசு அதிகாரி. ஆனால் சினிமா இசை ஆர்வத்தில் தொடர்ந்து முயன்று, இசையமைப்பாளராக மாறியுள்ளார். வாழ்த்துக்கள்.
இயக்குநர் கணேஷா பாண்டி மிக நன்றாக இயக்கியுள்ளார். அதை விட நன்றாக நடித்துள்ளார். இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது மிக மிகக் கடினம். அதை நன்றாகச் செய்துள்ளார்.
இப்போது சினிமாவில் விமர்சனம் வரக்கூடாது எனச் சொல்லி வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரை விமர்சனங்களை எப்போதும் வரவேற்பேன். இன்றைய காலகட்டத்தில் முதல் ஷோவில் கூட்டம் வரவில்லை எனும் போது அடுத்த ஷோ காலியாகி விடுகிறது. இந்த நிலையில் விமர்சனங்கள் வர வேண்டும், வரவில்லையெனில் அந்தப்படம் வருவதே தெரிவதில்லை. இந்த விசயத்தில் திரைத்துறையினர் முறையாகப் பேசி முடிவெடுக்க வேண்டும்” என்றார்.உடலால் ஆணாகவும் உடை நடவடிக்கையில் பெண்ணாகவும் தோற்றத்தை மாற்றிக்கொண்ட ஒருவன் இருக்கும் படத்தில், தன் தாயை தானே கொன்றதாக போலீஸ் அதிகாரியிடம் ஒப்புக்கொள்கிறான். அந்த கொலைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன என்பதை பரபரப்பாக சொல்லும் திரைப்படம் தான் சைலன்ட்.
இப்படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே கதாப்பாத்திரத்தில் வெளிப்படுத்தும் புவனேஸ்வரி எனும் புவனேஸ்வரன் கதாப்பாத்திரத்தில் இயக்குநர் கணேஷா பாண்டி நடித்துள்ளார்.
மதியழகன் பட நாயகி ஆரத்யா, தொப்பி படத்தின் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், சமயமுரளி, அறம் ராம்ஸ், பிக்பாஸ் நமீதா, மாரிமுத்து ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையராக பனியாற்றி வரும் திரு T சமய முரளி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
“சைலண்ட்” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரப்பாக நடந்து வருகிறது. படத்தை வரும் 29 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.
SP ராஜசேதுபதி SPR பிலிம்ஸ் சார்பில் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறார்.