தொழில் அதிபரை மணக்கிறார் நடிகை காஜால்!
சென்னை: நடிகை காஜல் திருமணம் குறித்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாத இறுதியில் திருமணம் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறித்திருந்தார். இந்த சூழ்நிலையில் காஜல் தனது தங்கையுடன் பேச்சுலர் பார்ட்டி போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
2004ம் வெளியான ’க்யூன் ஹோ கயா நா’ என்ற இந்தி படத்தின் வழியாக திரைதுறைக்கு அறிமுகமானார் காஜல் அகர்வால். பஞ்சாப் குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1985ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி மும்பையில் பிறந்தார். தற்போது 35 வயதாகும் நடிகை காஜல் அகர்வால் ஒரு வழியாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த திருமணம் தேதியை அறிவித்துவிட்டார்.
இந்தியில் அவர் எதிர்பார்த்த சினிமா வாய்ப்பு கிடைகவில்லை. அதனால் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் கால்பதித்தார்.
தமிழில் 2008ம் ஆண்டு வெளியான பழனி படத்தில் பரத்துக்கு ஜோடியாக தமிழுக்கு அறிமுகமானார் காஜல் அகர்வால். சூரியாவின் மாற்றான், ஆல் இன் ஆல் அழகு ராஜா,விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார் காஜல்.
தமிழில் கடைசியாக நடித்த படம் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி. இந்த படமும் சூப்பார் ஹிட் கொடுத்தது. கொரோனா காரணமாக சினிமா படபிடிப்பு இல்லாமல் இருக்கும் இந்த சூழ்நிலையில் நேற்று தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தொழிலதிபர் கெளதம் கிட்சிலு என்பவரை திருமணம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் 30ஆம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாகவும் அதில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-யாழினி சோமு