நீதிபதிகள் நகர்வலம் செல்ல வேண்டும்!
டி.வி.சோமு சிறப்பு பக்கங்கள்:
தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை மாதங்களில், 1.18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், நான்கு பேர், ‘ரேபிஸ்’ நோயால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், “தெருநாய்களைப் பிடித்து கருத்தடை செய்யும்போது அவை இறந்துவிட்டால் அலுவலர்கள் சிறை செல்ல வேண்டி இருக்கும்.எனவே தெருநாய்களைப் பிடித்துச் செல்ல பயப்படுகிறார்கள” என்று சட்டமன்றத்தில் அமைச்சர் கே.என். நேரு சொல்லி இருக்கிறார்.
மாண்புமிகு நீதிமன்றங்களுக்கு நாய்கள் மீது இருக்கும் அக்கறை போற்றத்தக்கதே. அதே நேரம் மக்கள் மீதும் கொஞ்சம் கருணை காட்ட வேண்டும்.
அந்தக் காலத்தில் மன்னர்கள் மாறு வேடத்தில் நகர்வலம் செல்வார்களாம். நாட்டின் நிலை – மக்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய.
இன்று மன்னர்களுக்கு பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களும் சுற்றுப்பயணம் செய்கிறார்கள்.
அதே நேரம், அந்தக் கால மன்னர்களைப் போல, தற்போது ஆட்சியாளர்கள் தீர்ப்புகளை அளிக்க முடியாது.
அது நீதிமன்றத்தின் கையில் இருக்கிறது.
ஆகவே மாண்புமிகு நீதிபதிகள், எதார்த்த நிலையை அறிய அவ்வப்போது நகர்வலம் செல்ல வேண்டும்.
2021 அக்டோபர் மாதம் நடந்த ஒரு சம்பவத்தை இதற்கு உதாரணமாக சொல்லலாம்..
முதலமைச்சர் நிகழ்ச்சியால் போக்குவரத்த நெரிசலில் சிக்கினார் சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
மன்றம் வந்த அவர் உடனடியாக, உள்துறைச் செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.
இத்தனைக்கும் அவர் திட்டமிட்டு நகர்வலம் செல்லவில்லை. வழக்கமான பணிக்காகவே சென்றார். ஆனால் போக்குவரத்து நெரிசலை உணர்ந்தார்.
அல்லது குறிப்பிட்ட றிப்பிட்ட தீர்ப்புகளை அளிக்கும் முன், அது குறித்த கள ஆய்வை.. நகர்வலத்தை நீதிபதிகள் செய்யலாம்.
தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்த வழக்கு ஒன்றில், நீதிபதி, தானும் கவுன்சிலிங் சென்று விசயங்களை அறிய இருக்கிறேன் என்றார்.
ஆகவே நீதிபதிகள் நகர்வலம் செல்ல வேண்டும்.
புண்ணியமாகப்போகும்!
– டி.வி.சோமு
