ஜோய் இல்லம்: 50 குடும்பங்களின் கனவை நினைவைக்கிய ஜோய் ஆலுக்காஸ்!
சென்னையில் ஒரு நெகிழ்ச்சியான வைபவம்! வெறும் தங்கம் விற்பதோடு மட்டுமல்லாமல், ஏழை எளிய மக்களின் வாழ்வில் ‘நம்பிக்கை’ எனும் தங்கத்தை வாரி வழங்கி வருகிறது ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட ‘ஜோய் இல்லங்களை’ (Joy Homes) வழங்கி அசத்தியுள்ளனர்.
வள்ளுவர் கோட்டத்தில் அரங்கேறிய வசந்த விழா!
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த விழாவில், நட்சத்திர பட்டாளமே திரண்டு நின்றது. ஜோய் ஆலுக்காஸ் குழுமத் தலைவர் திரு. ஜோய் ஆலுக்காஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் பயனாளிகளுக்கு வீட்டின் சாவிகளை வழங்கி வாழ்த்தினார். இயக்குனர் தியாகராஜன், நடிகை தேவயானி, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், நல்லி குப்புசாமி உள்ளிட்ட பல்துறை ஆளுமைகள் இந்த மனிதாபிமான நிகழ்வுக்கு மெருகூட்டினர்.
வெறும் தங்குமிடம் அல்ல… அது கௌரவம்!
சுமார் 500 சதுர அடி பரப்பளவில், தலா 7.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த வீடுகள், வறுமை, இயற்கை சீற்றம் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பெரும் வரப்பிரசாதம். “கண்ணியமான வாழ்வு ஒவ்வொரு மனிதனின் உரிமை” என்பதை இந்தத் திட்டம் உரக்கச் சொல்கிறது.
தென்னிந்தியா முழுவதும் விரியும் கருணைக்கரம்!
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா என இதுவரை 600-க்கும் மேற்பட்ட இல்லங்களை வழங்கியுள்ள அறக்கட்டளை, அடுத்ததாக தெலங்கானா மற்றும் ஆந்திராவிலும் தலா 50 வீடுகளைக் கட்டி வருகிறது.
மருத்துவம் முதல் கல்வி வரை… ஓயாத சேவை!
2009 முதல் கல்வி, சுகாதாரம், முதியோர் பராமரிப்பு எனப் பல தளங்களில் இயங்கி வரும் இந்த அறக்கட்டளை:
-
சுகாதாரம்: டயாலிசிஸ் கருவிகள் மற்றும் மருத்துவமனை வார்டுகள் சீரமைப்பு.
-
கல்வி: ‘ஜோய் ஆஃப் ஹோப்’ மூலம் கோவிட் காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவி.
-
பெண் மேம்பாடு: தையல் மற்றும் அழகுக்கலை பயிற்சிகள் மூலம் பெண்களைப் பொருளாதார ரீதியாக முன்னேற்றுதல்.
“மனிதநேயத்தின் ரோல் மாடல்!” – டாப் ஸ்டார் பிரசாந்த் புகழாரம்
விழாவில் பேசிய பிரசாந்த், “கல்யாணம் பண்ணிப் பார், வீட்டை கட்டிப் பார் என்பார்கள். இரண்டிலுமே ஜோய் ஆலுக்காஸ் தன் பங்களிப்பைச் செய்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கஷ்டப்படும் மக்களைத் தேடிச் சென்று உதவும் இவர்களின் குணம் போற்றத்தக்கது. தனி ஆளாக நின்று சாதித்த திரு. ஜோய் அவர்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த ரோல் மாடல்” என நெகிழ்ந்து பேசினார்.

