ஜெயம் ரவி ரசிகர்களுக்கு ஜாக்பாட்! ஏப்ரல் 10-ல் மீண்டும் அதிரப்போகும் “தாம் தூம்”!

ஜெயம் ரவி ரசிகர்களுக்கு ஜாக்பாட்! ஏப்ரல் 10-ல் மீண்டும் அதிரப்போகும் “தாம் தூம்”!

2K கிட்ஸின் ஆல்-டைம் ஃபேவரைட், ஸ்டைலிஷ் ஆக்சன் அதிரடி “தாம் தூம்” மீண்டும் தியேட்டர்களில் ரணகளம் செய்ய வருகிறது! நடிகர் ரவி மோகனின் (ஜெயம் ரவி) கேரியரில் ஒரு மைல்கல்லாக அமைந்த இந்தத் திரைப்படம், புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸாக உள்ளது ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் ட்ரீட்.

திரைப்பட விநியோகத்தில் புதிய பாய்ச்சல்!

சேலம் ஏரியாவில் பல ஹிட் படங்களை கொடுத்து மாஸ் காட்டிய Murugan Film Factory கந்தசாமி மற்றும் பாலசுப்ரமணி ஆகியோர், இந்த பிரம்மாண்ட ரீ-ரிலீஸை முன்னெடுத்துள்ளனர். ஓசூரில் ‘Grand Cinemas’ மல்டிப்ளெக்ஸ் மூலம் ரசிகர்களின் நாடித் துடிப்பை அறிந்த இவர்கள், 18 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பழைய நினைவுகளை தியேட்டர்களில் மீண்டும் உயிர் பெறச் செய்யத் தயாராகிவிட்டனர்.

அன்று இளைஞர்களின் ஹார்ட் பீட்.. இன்று டிஜிட்டல் ட்ரீட்!

2008-ல் வெளியான போது, வெளிநாட்டு லொகேஷன்கள், ஹாரிஸ் ஜெயராஜின் மெய்சிலிர்க்க வைக்கும் இசை என ஒரு “கம்ப்ளீட் பேக்கேஜ்” ஆக இளைஞர்களை சுண்டி இழுத்தது “தாம் தூம்”. குறிப்பாக கங்கனா ரணாவத் தமிழில் அறிமுகமான இந்தப் படம், இன்று பாலிவுட் குயினாக அவர் இருக்கும் வேளையில் மீண்டும் வருவது கூடுதல் ஸ்பெஷல். ராய் லக்ஷ்மி, ஜெயராம் என நட்சத்திர பட்டாளமே நடித்த இந்தப் படம், மறைந்த மேதகு இயக்குநர் ஜீவாவின் கைவண்ணத்தில் உருவான ஒரு மாஸ்டர் பீஸ்!

என்ன ஸ்பெஷல்?

  • 5.1 ஆடியோ சவுண்ட்: ஹாரிஸ் ஜெயராஜின் பிஜிஎம் மற்றும் பாடல்கள் இப்போது இன்னும் தெறிக்கும் தரத்தில்!

  • டிஜிட்டல் மெருகேற்றம்: பழைய படத்தை புதிய பொலிவுடன் மெகா ஸ்கிரீனில் ரசிக்கலாம்.

  • முப்பெரும் மாநிலங்கள்: வரும் ஏப்ரல் 10-ம் தேதி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா என தென்னிந்தியா முழுவதும் இப்படம் வெளியாகிறது.

முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான Mediaone Global Entertainment மற்றும் Ayngaran International தயாரிப்பில் உருவான இந்த அதிரடி ஆட்டத்தை மீண்டும் கொண்டாடத் தயாராகுங்கள். முருகா ஃபிலிம் ஃபேக்டரி தரப்பில், அடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை ரீ-ரிலீஸ் செய்ய வரிசை கட்டி நிற்கிறார்கள்.

ஆக, ஏப்ரல் 10 அன்னைக்கு தியேட்டர்களில் ‘தாம் தூம்’ திருவிழா கன்ஃபார்ம்!

Related Posts