ஜீவன் இரட்டை வேடங்களில் நடிக்கும் “பாம்பாட்டம்’!

நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகர் ஜீவன். இவர் தற்போது ஹீரோவாக நடித்து வரும் படம் ’’பாம்பாட்டம்.  ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம்  “ பாம்பாட்டம்’’ இதில் நாயகனாக நடிக்கிறார் ஜீவன்.

 இவருக்கு ஜோடியாக டகால்டி படத்தில் நடித்த ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள்.

இளவரசி காதபாத்திரத்தில் மல்லிகா ஷராவத் நடிக்கிறார். மற்றும் ஐந்து மொழிகளிலிருந்தும் 20 க்கும் மேற்பட்ட முக்கிய நடிகர்கள்  நடிக்கிறார்கள். இவர்களுடன் இன்னும் ஏரளாமான நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள் என்பது தகவல்.

ஒளிப்பதிவு – இனியன் J ஹாரீஸ்

இசை – அம்ரிஷ்

பாடல்கள்  – பா.விஜய், யுகபாரதி, விவேகா

எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்

கலை  – C.பழனிவேல்

ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன்

நடனம் – தினேஷ், சிவசங்கர்

மக்கள் தொடர்பு – மணவை புவன்

இணை தயாரிப்பு  – பண்ணை A இளங்கோவன்

தயாரிப்பு  – V.பழனிவேல்

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் V.C.வடிவுடையான்

படம் பற்றி இயக்குனர் V.C.வடிவுடையான் பகிர்ந்த தகவல்…

1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதையை, ஹாரர் மற்றும் திரில்லர் கலந்து உருவாக்கி உள்ளேன்.

மிகப்பெரிய C.G நிறுவனம் ஒன்று இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை மிக பிரமாண்டமாக செய்து வருகிறார்கள்.

மிகப்பெரிய பொருட்செலவில் மும்பையில் செட் அமைக்கப்பட்டு வருகிறது அங்கு படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்க உள்ளோம்.

படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் மொத்தம் 120 நாட்கள் நடைபெற இருக்கிறது என்றார்.

Related Posts