சித்ரா அடித்துக் கொலை? தாய் கதறல்!
சென்னை: தனது மகளை அடுத்துக் கொன்று விட்டதாக சின்னத்திரை நடிகை சித்ராவின் தாய் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார் சித்ரா. அவரது மரணம் திரைத்துறையினர், மற்றும் ரசிகர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று அவரது பிரேத பரிசோதனை நடைபெற்றது.
அவரது உடல் பெற்றோர் இடத்தில் ஒப்படைக்கப்பட்டது. தனது மகளை அவரது கணவரான ஹேம்நாத் ரவி அடித்துக் கொன்றுவிட்டதாக சித்ராவின் தாய் கதறியழுதது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த தொடர் மூலாம் ஏராழமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் சித்ரா.
இந்த சூழ்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொழிலதிபர் ஹேம்நாத் ரவியை பெற்றோர் சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்து கொண்டார் சித்ரா.
வரும் பிப்ரவரி மாதம் 10 தேதி திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று சென்னை நசரத்பேட்டை அருகே இருக்கும் தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.முகத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட அவரது சடலம் பல சந்தேகத்தை ஏற்படுத்தியது. தனது கணவரான ஹேம்நாத் ரவி உடன் தங்கியிருந்த போது அவரை வெளியே அனுப்பிவிட்டு ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கூறப்பட்டது. அவர் தற்கொலை செய்திருந்தால் எப்படி முகத்தில் காயம் ஏற்பட்டது என பல கேள்விகள் எழுந்துள்ளது. அவரது மரணம் உண்மையிலேயே தற்கொலைதானா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சித்ராவின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது சகோதரர் சரவணனிடம் ஒப்படைக்கப்பட்டது. மகளின் உடலை பார்த்த அவரது தாயார் எனது மகள் கோழையில்லை. அவளை அடித்து கொன்றுவிட்டான் அவரை தைரியமனாவராகதான் வளர்த்தேன் என கதறியழுதார்.
செவ்வாய்க்கிழமை இரவு என்னிடம் போனில் பேசும்போது நன்றாகத்தான் பேசினாள். பிப்ரவரி10 திருமணம் திங்கள் கிழமைதான் மண்டபத்தை பார்த்து அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தோம். அதற்குள் இப்படி செய்யும் அளவுக்கு அவள் கோழையில்லை. என திட்டவட்டமாக கூறியுள்ளார். கொலையா? தற்கொலையா? என்பதை காவல் துறையினர் தான் உண்மையை கண்டறிய வேண்டும்.