சித்ரா முதன்முதலில் நடித்த பாடல் வீடியோ!
சின்னத்திரையில் புகழ் பெற்ற நடிகை சித்ரா, தற்கொலை செய்துகொண்டது, பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. சமூகவலைதளங்களில் பலரும், அவரது படங்களை பதிவிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வி.ஜே. மற்றும் மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சித்ரா பிறகு தொடர்களில் நடித்து பிரபலமானார்.
அப்படி அவர் முதன் முதலில் நடித்த தொடர் குறித்து, இயக்குநர் நேசமிகு ராஜகுமாரன் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
“2014 ஏப்ரல் மாதம் . கலைஞரின் கதை நேரம் தொடருக்கு நடிகர்களை இறுதி செய்து முடித்தேன். ‘அன்னமே தங்கமே கேளு நம்ம கலைஞர் கதைகள் பாரு.’ என்று நான் எழுதிய முகப்புப் பாடலில் நடிக்க புது முக நடிகையைத் தேடினேன். நண்பர் பத்திரிகையாளர் அமலன், சித்ராவை எனக்கு அறிமுகப் படுத்தினார்.
மறுநாள் படப்பிடிப்பு. ஆகவே, சித்ராவை நேரில் பார்க்கவில்லை. மெயிலில் படங்கள் பார்த்து, போனில் பேசி உறுதி செய்தேன்.
அப்போது அவர், “சார் நான் இதுவரை வி.ஜே. வாதான் பண்ணிருக்கேன். நடிச்சதில்ல !” என்றார்.
“பரவாயில்ல வாங்க!” என்றேன்.
திருப்போரூரில் படப்பிடிப்பு. பாடல் காட்சியைப் படமாக்கும் கருவிக்கு பட்ஜெட் அனுமதிக்கவில்லை. நான் பின்னிருந்து பாடினேன். அவர் அவ்வளவு இயல்பாக வாயசைத்து நடித்தார். ( பாடலுக்கு வாயசைப்பது என்பது புது முக நடிகர்களுக்கு எளிதில் கை வராத நடிப்புக்கலை ! ) வீடியோவைப் பாருங்கள் ! புரியும் !
படப்பிடிப்பு முடிந்த பின் அவரிடம், “நீங்கள் சிறந்த நடிகை. நடிப்பதற்கு முயற்சிக்கலாம்!” என்றேன்.
அடர் உதட்டுச் சாயம் அற்ற, அப்பிய முகப் பூச்சற்ற, செயற்கைப் பொன் ஆபரணங்கள் அற்ற, இயல்பான அந்த – 25 வயது சித்துவின் முகம் இன்று காலை என்னை என்னவோ செய்கிறது !.. ( ஒளிப்பதிவாளர் : வெற்றி. ஒளிப்படங்கள் : அசோக் பாண்டியன். இசை : சங்கர் மணிவண்ணன் தயாரிப்பு நிர்வாகி : நமஸ்காரம் சரவணன் )”
- இவ்வாறு நேசமிகு ராஜகுமாரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பாடல் இணைப்பு :
https://youtu.be/_AdOaZDhyd8