திரைப்பட விமர்சனம்: கருப்பங்காட்டு வலசு
கொரோனா ஊரடங்கு காரணமாக, பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ரசிகர்கள் மீது பெரும் எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம், கருப்பங்காட்டு வலசு.
கருப்பங்காட்டு வலசு என்ற கிராமம் பின்தங்கி வளர்ச்சியடையாமல் இருக்கிறது. அதை ஸ்மாட் கிராமமாக மாற்ற முயற்சிக்கிறார் ஊர் தலைவரின் மகளாக வரும் நீலிமா.
அந்த ஊரில் மொத்தமே 300 பேர் தான் வசிக்கிறார்கள். மிக பின்தங்கிய அந்த ஊரில் அடிப்படைப் பிரச்சனைகள் ஏராளமாய் இருக்கின்றன.
கழிப்பிட வசதி, மாணவர்களுக்கு கணினி வசதி, சிசி டிவி கேமரா என ஏகத்துக்கு நல்லது செய்கிறார். ஆனால் ஒரு சிலர் இதை எதிர்க்கிறார்கள்.
இந்த நிலையில் திடீரென ஒரே நாளில், ஊர்மக்களில் நான்குபேர் மர்மமாக மரணமடைகிறார்கள். காவல்துறை விசாரிக்கிறது. அவர்களது மரணத்துக்குக் காரணம் என்ன என்பதை காவல்துறை துப்பறிவதே கதை.
கிராமத்தில் நடக்கும் க்ரைம் சம்பங்களின் பின்னணியில் திரைப்படம் வந்து நீண்ட நாட்களாகி விட்டது. இந்தக் குறையைப் போக்க வந்திருக்கும் படம் இது.
ஆரம்பத்தில், சமூக சேவையை போதிக்கும் படமோ என்று நினைக்க வைக்கிறது. போகப்போக க்ரைம் சப்ஜெக்டுக்கு மாறுகிறது.
நீலிமா, எபினேசர் தேவராஜ், அரியா என அனைவரும் கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஆதித்யா – சூர்யாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். ஒளிப்பதிவு சிறப்பு.
செல்வேந்தரன் சிறப்பாக இயக்கி இருக்கிறார்.