ஜவான் – திரைவிமர்சனம்

ஜவான் – திரைவிமர்சனம்

ரெட் சில்லீஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ஜவான். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட  இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 4 ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக  வெளியாகியிருக்கிறது ஜவான்.

ஷாருக்கான் மற்றும் அட்லீ கூட்டணியில் முதல் முறையாக இணைந்துள்ள திரைப்படம் ஜவான். ஹிந்தியில் மற்றும் தமிழ் இயக்குனர் அட்லியின் கைவசத்தில் உருவான இந்த திரைப்படம் எப்படி இருக்கு விரிவாக பார்க்கலாம்.
ஜவான் கதைக்களம்
கதையின் நாயகன் ஷாருக்கான் [ஆசாத்] பெண் கைதிகளின் ஜெயிலராக இருக்கிறார். தன்னுடைய சிறைச்சாலையில் இருக்கும் 6 பெண்களை வைத்து மக்களுக்கு எதிராக நடக்கும் தீமைகளை ஒலிக்கும் விதமாக அரசாங்கத்தை எதிர்த்து போராடுகிறார்.

ஆசாத் தனது உண்மையான பெயரை மறைத்து விக்ரம் ரத்தோர்’ என்ற அடையாளத்துடன் அரசாங்கத்தை எதிர்க்கிறார். ஷாருக்கான் மற்றும் இந்த 6 பெண்களும் இப்படி மாறுவதற்கு காரணமாக இருப்பவர் வில்லன் விஜய் சேதுபதி [காளி].

வில்லன் விஜய் சேதுபதிக்கும் ஹீரோ ஷாருக்கானுக்கும் இடையே உள்ள பகை என்ன? மக்களுக்காக போராடிய ஷாருக்கான் மற்றும் 6 பெண்களும் அதில் வெற்றி பெற்றார்களா இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. ஷாருக்கானுக்கு  சரிசமமாக
வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. நயன்தாராவின் பங்கு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஜவானில் ஷாருக்கானுக்கு நிகரான ஆக்ஷன் காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார் நயன்தாரா.

தீபிகா படுகோன் கதைக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆனால் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக என்ட்ரி கொடுத்த சஞ்சய் தத் தீபிகாவை மிஞ்சிவிட்டார். பிரியாமணி, சன்யா மல்கோத்ரா, லெகர் கான் மற்றும் ஷாருக்கான் குரூப்பில் இருந்த மற்ற பெண்களின் நடிப்பும் அருமை.

நடிகர் யோகி பாபு வழக்கமான தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இயக்குனர் அட்லீ இந்த படத்தில் சற்று சுவாரஸ்யத்தை கூட்டி கைதட்டல்களை அள்ளியுள்ளார். மாஸ், சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்து சரிவிதமான கலவையில்

திரைக்கதை அமைந்துள்ளது.

படத்தின் டெக்கனிகள் பட்டையை கிளப்பியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் சபாஷ் போடலாம். அதற்காக ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு, ஒளிப்பதிவாளர் விஷ்ணு மற்றும் எடிட்டர் ரூபனை பாராட்டலாம்.

மேலும் அட்லீ சொல்ல வந்த கருத்து  பாராட்டுக்குரியது. அனிருத்தின் பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலம். ஆக்ஷன் காட்சிகளில் ஷாருக்கான் ஒரு பக்கம் சண்டை போட்டால் தன்னுடைய பின்னணி இசையின் மூலம் மற்றொரு பக்கம் மாஸ் காட்டிவிட்டார் அனிருத். மொத்தத்தில் ஜவான் ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்துள்ளது.

Related Posts