‘சார்’ படம் குறித்து விஜய் சேதுபதி சொன்னது உண்மையா?

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘சார்’. இப்படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். சாயாதேவி கண்ணன், சரவணன், ரமா, சிராஜ் எஸ், ஜெயபாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சித்துகுமார் இசையமைத்துள்ளார்.
இப்படம் அக்.18 இன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள் வெளியானபோதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. கல்வியின் அவசியத்தை உணர்த்துவதோடு, ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி பெறக்கூடாது எனதடுப்பவர்களை எதிர்க்கும் படமாக உருவாகி இருக்கிறது என்பதும் எதிர்பார்ப்புக்குக் காரணம்.
இந்த நிலையில் இப்படத்திற்கு விஜய் சேதுபதி படத்தைப் பார்த்து பாராட்டினார். அவர், “நம்முடைய முன்னேற்றத்துக்கு காரணமான கல்வி அவ்ளோ சுலபமா எல்லாருக்கும் கிடைத்துவிட வில்லை. கல்வியின் மகத்துவத்தை, அதன் தேவையை மற்றும் அது நம்முடைய அடிப்படை உரிமை என்பதை ரொம்ப அழகாக சொன்ன படம்.
ஒரு குழந்தைக்கு போகிற கல்வியை தடுக்குறாங்க என்றால் அது கடவுளாக இருந்தாலும் சரி, அதை எதிர்த்து நிற்பது தப்பு இல்லை என சொல்லும் படம். கிராமத்தில் கல்வி போய் சேர வேண்டும் என்று ஒரு ஆசிரியர் எடுக்கும் முயற்சி தான் இந்த சார். இந்த படம் முடியும் போது நம்ம எல்லாரும் விமல் கதாபாத்திரத்துடன் நிற்போம் என நம்புகிறேன்” என்றார் விஜய் சேதுபதி.
இந்நிலையிம் படம் இன்று வெளியாகும் நிலையில், நேற்று செய்தியாளர்களுக்கு சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது.
ஒரு கிராமத்தில் அரசுப் பள்ளி அமைக்க முயற்சி செய்து வெற்றி பெறுகிறார் ஆசிரியர் ஒருவர். இது அந்த கிராமத்தில் இருக்கும் ஆதிக்க சாதியினருக்குப் பிடிக்கில்லை. ஏனென்றால், கல்வி எல்லோருக்கும் கிடைப்பதை அவர்கள் விரும்பவில்லை. ஆகவே பள்ளியை இடிக்க நினைக்கிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யத்துடன் சொல்கிறது படம்.
அதே போல, கல்வியைத் தடுக்கும் வில்லனுக்கு சாமி என்று பெயர்… அவரை எதிர்த்து அனைவருக்கும் கல்வியை போதிக்கும் ஆசிரியருக்கு ஞானம் என்று பெயர்.
இறுதியில் சாமியை ஞானம் வீழ்த்துகிறார். ” ஒரு குழந்தைக்கு போகிற கல்வியை தடுக்குறாங்க என்றால் அது கடவுளாக இருந்தாலும் சரி” என்கிற விஜய் சேதுபதியின் வார்த்தைகள் சரியே!
இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது!