ஐ பி எல்: திரை விமர்சனம்
ஜி ஆர் மதன் கிருஷ்ணன் தயாரிப்பில் கருணாநிதி இயக்க, கிஷோர், டி டி எஃப் வாசன், அபிராமி, குஷிதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஐ.பி.எல்.
இசை: அஸ்வின் விநாயகமூர்த்தி, ஒளிப்பதிவு: எஸ் பிச்சுமணி
கிஷோர் சொந்தமாக டாக்ஸி ஓட்டுகிறார். ஒரு சமயம் அவர் வண்டியில் செல்லும் போது குறுக்கே டிடிஎஃப் வாசன் டூவீலரில் வந்து இடித்துவிடுகிறார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது வேறு ஒருவரின் டூ வீலர் கிஷோர் காலில் மோதி விட எலும்பு முறிவு ஏற்படுகிறது. இதற்கிடையில் ஒரு வீடியோ பரவி சர்ச்சையாகிறது. கிஷோர் மீது பழி போட்டு போலீஸ் கைது செய்து அவரை சித்தரவதை செய்கிறது. அப்போதுதான் கிஷோர் தனது காதலியின் அண்ணன் என்பது டிடிஎஃப் வாசனுக்கு தெரிகிறது. அவர் கிஷோரை காப்பாற்ற முயல்கிறார் அதன்பிறகு நடந்தது என்பதே கதை.
அதிவேகத்தில் பைக் ஓட்டி, அதை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் டிடிஎப் வாசன். அவர்தான் இந்தப் படத்தில் நாயகன்.
இந்த படத்தில் உணவு டெலிவரிபாயாக அறிமுகமாகி இருக்கிறார். தன்னால் முடிந்த அளவு நடித்து இருக்கிறார்.
கிஷோர் டாக்ஸி டிரைவராக வருகிறார். இயல்பாக நடித்து இருக்கிறார். கால் எலும்பு முறிவுக்கு பிறகு ஊன்று கோலுடன் தாங்கி தாங்கி நடப்பது, தன் கார் மீது பைக்கில் வந்து மோதிய வாசனுடன் வாக்குவாதம் செய்வது, காவ ல்துறை சித்திரவதைக்கு ஆளாவது என கவனத்தை ஈர்க்கிறார்.
ஹரிஷ் பெராடி கொடூர வில்லத்தனத்தை காட்டி இருக்கிறார்.
அபிராமி, போஸ் வெங்கட், நரேன், குஷிதா உள்ளிடடோர் தங்கள் பாத்திரம் அறிந்து நடித்து இருக்கிறார்கள்.
அஸ்வின் விநாயகமூர்த்தி பின்னணி இசை ஈர்க்கிறது. எஸ் பிச்சுமணியின் ஒளிப்பதிவு பரவாயில்லை என்ற உணர்வையே ஏற்படுத்துகிறது.
அரசியல்வாதிகளின் கோரமுகம், காவல்துறையின் ஈரமற்ற இதயம் என சமூக அவலத்தை கிழித்திருக்கிறார் இயக்குநர் கருணாநிதி.
முதல்வர் தனக்கு தேவையான ஆவணங்களை பண்ண வீட்டில் ஆட்களை அனுப்பி தேடுவது, அங்கு நடக்கும் கொலைகள் போன்ற சம்பவங்கள்தான் படத்தின் அடிநாதம். இதிலிருந்தே எந்த அளவுக்கு அரசியல் இருக்கும் என்பதை அறியலாம்.
மொத்தத்தில் ரசித்துப் பார்க்கக்கூடிய படம்.
ரேட்டிங்: 3.8/5
