Tere Ishk Mein: திரை விமர்சனம்
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சனோன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் தேரே இஷ்க் மே.
இந்திய விமானப்படையில் விமானியாக பணிபுரிகிறார் தனுஷ். அதீத கோபக்காரர். அதனால் ஏற்படும் விளைவு.. வேலையில் இருந்து நீக்கப்படுகிறார். அவர் மீண்டும் பணியில் சேர்வதற்கு கவுன்சிலிங்கில் இருந்து சர்டிபிகேட் தேவைப்படுகிறது.
இன்னொரு பக்கம்… இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்த.. உடனே சர்டிபிகேட் வாங்கி மீண்டும் பணியில் சேர துடிக்கிறார் தனுஸ். அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க, அவரது முன்னாள் காதலி க்ரிதி சனோன் வருகிறார். இருவருக்குமான பிளாஸ்பேக்.. பிறகு நடந்தது என்ன என்பதுதான் கதை.
தனுஷின் நடிப்பை பற்றி சொல்ல தேவையே இல்லை. கல்லூரி மாணவராகவும், ராணுவ வீரராகவும் சங்கர் என்ற கதாபாத்திரத்திரமாகவே மாறிவிட்டார்.
அவருக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் க்ரிதி சனோன் சிறந்த நடிப்பை அளித்து உள்ளார். முதல் பாதி முழுக்கவே ஒரு கல்லூரி மாணவியாக அழகான நடிப்பை கொடுத்துள்ளார். இரண்டாம் பாதையில் குறிப்பாக கிளைமாக்ஸ்ல் கைத்தட்டல்களை பெறுகிறார் க்ரிதி சனோன். தனுஷின் அப்பாவாக வரும் பிரகாஷ்ராஜ் தான் ஒரு சீனியர் நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். க்ரிதி சனோனின் அப்பாவாக நடித்தவரும், தனுஷின் நண்பராக நடித்த வரும் நல்ல ஒரு நடிப்பை கொடுத்துள்ளனர்.
இயக்குனர் ஆனந்த் எல் ராய் ஒரு அழகான காதல் காவியத்தை கொடுக்க முயற்சி செய்துள்ளார் அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுள்ளார் என்று சொல்லலாம். கதையாக கேட்பதற்கு ஒன்றும் புதிதாக இல்லை என்றாலும் திரைக்கதையில் சுவாரசியத்தை சேர்க்க முயற்சி செய்துள்ளார். படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடினாலும் முதல் பாதியில் பெரிதாக எங்கும் போர் அடிக்கவில்லை. படத்தின் சிக்கலே இரண்டாம் பாதியில் தான். ஒவ்வொரு காட்சிகளும் நீளமாக எடுக்கப்பட்டுள்ளதால் சில இடங்களில் தொய்வை சந்திக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் ஒரு சிலருக்கு கனெக்ட் ஆகும் என்றாலும், சிலருக்கு சுத்தமாக கனெக்ட் ஆகாமல் போக வாய்ப்புள்ளது.
விமானப்படை தொடர்பாக வரும் காட்சிகள் அனைத்தும் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது, அதில் உள்ள VFXம் கிட்டத்தட்ட நம்பும்படியாக இருந்தது படத்திற்கு கூடுதல் பலம். சங்கர் என்ற கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்த விதம் பாராட்டுக்குரியது. அதிலிருந்து அவர் எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதை அழகாக காட்டி இருந்தனர். இரண்டாம் பதில் மொட்டை மாடியில் தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் இடையே நடக்கும் ஒரு உரையாடல் காட்சி நன்றாக எடுக்கப்பட்டிருந்தது. வழக்கமாக காதல் தோல்வியில் ஹீரோ தான் மது மற்றும் புகைப்படத்திற்கு அடிமையாவார் என்று காலம் காலமாக காட்டப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தில் அதனை கதாநாயகி செய்கிறார்.
ஏ ஆர் ரகுமானின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்கிறது. சில காட்சிகள் காசியில் படமாக்கப்பட்டுள்ளது. அவற்றை தூக்கி இருந்தாலும் படத்தில் எந்த வித்தியாசமும் இருந்திருக்காது. முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த தேரே இஷ்க் மே படம் இளைஞர்களை கவரும் என்றாலும், அனைத்து வித ரசிகர்களையும் திருப்தி படுத்துமா என்பது சந்தேகமே.
