Indian 2 : உடலுறவின்போதே ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது!: திருமந்திரம்

Indian 2 : உடலுறவின்போதே ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது!: திருமந்திரம்

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்க, கமல் நாயகனாக நடித்து இருக்கும் இந்தியன் 2 திரைப்படம் நாளை (ஜூலை 12) உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தின் முன்பதிவு வசூல், உலக அளவில் சாதனை படைத்து வருகிறது.இந்தியன் தாத்தா (சேனாபதி)யின் வயது குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். இந்நிலையில், படத்தின் புதிய ப்ரோமோவில் பாபி சிம்ஹா பேசும் காட்சி இதற்கு விடை அளிப்பதாக உள்ளது.

அக்காட்சியில் பாபி சிம்ஹா, “தியானம், தூக்கம் என எல்லாவற்றையும் மிகச்சரியாக கடைபிடித்து முறையான வாழ்த்தை வாழ்கிறார் இது குறித்து 9திருமூலர் அருளிய) திருமந்திரத்தில் விரிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது” என்கிறார்.

இதனால் ரசிகர்களிடையே திருமந்திரம் குறித்து அறியும் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. திருமந்திரத்தை இயற்றியவர் திருமூலர். யோகியான இவர், பல்லாண்டு காலம் உயிர் வாழ்ந்தவர் என்று நம்பப்பகிறது. அவர் தான் கற்ற வித்தைகளை திருமந்திரம் நூலில் குறிப்பிட்டு உள்ளார். இது 3000 பாடல்களைக் கொண்டது.திருமந்திரத்தில் குறிப்பிடாத மருத்துவக் குறிப்புகளே இல்லை. தவிர மனிதரின் ஆயுளுக்கு வாழும் முறை மட்டும் காரணம் இல்லை.. உடலுறவின் போதே, குழந்தையின் ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது என்றும் நூலில் குறிப்பிடுகிறார்.

இந்நூலில், ‘479. யோகி சுக்கிலத்தைப் பாய்ச்சல்‘ அதிகாரத்தில் இதைக் குறிப்பிடுகிறார்.

“பாய்ந்தபின் அஞ்சுஓடில் ஆயுளும் நூறு ஆகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்து அறிந்து இவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே” என்பதே அந்த அதிகாரம்.

இதன் பொருள்:

“ஆணின் சுக்கிலம் ஆணிடமிருந்து பிரிந்து ஐந்து விரற்கிடை ஓடி விழுமாயின் பிறக்கும் உயிரின் வாழ்வு நூறு ஆண்டு. அந்தச் சுக்கிலம் நான்கு விரற்கிடை ஓடி விழுந்தால் அந்தஉயிரின் வாழ்வு எண்பதாண்டு. சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவை இப்படி நன்றாய் உணர்ந்து பாய்ந்திடச் செய்யும் ஆற்றல் யோகிக்கு உண்டு. யோகி வேண்டியபடி சுக்கிலத்தைச் செலுத்தி விரும்பியபடி குழந்தை பெற முடியும்” என்கிறது திருமூலர் அருளிய திருமந்திரம்.

மொத்தத்தில் இந்தியன் 2 திரைப்படம், திருமந்திரத்தை நோக்கி ரசிகர்களை ஈர்த்து இருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடுதலாகி இருக்கிறது.

 

Related Posts