“படப்பிடிப்பில் யாரையும் திட்ட மாட்டேன்!”: யாரைச் சொல்கிறார் சீனு ராமசாமி?

“படப்பிடிப்பில் யாரையும் திட்ட மாட்டேன்!”: யாரைச் சொல்கிறார் சீனு ராமசாமி?

படப்பிடிப்பில் நடிகர்களை திட்டியதாகவும், அடித்ததாகவும் சில இயக்குநர்களே சொல்வது உண்டு. இந்த நிலையில்,  படப்பிடிப்பில் தான் யாரையும் திட்டியதே இல்லை என இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்து உள்ளார்.

விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் அருளானந்து – மேத்யூ அருளானந்து தயாரிக்க,  தேசிய விருது படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன், யோகி பாபு, பிரிகிடா,  உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம்,  ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’.

இத்திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில் ”படப்பிடிப்பு தளத்தை பதற வைக்க மாட்டேன். எப்போதும் இயல்பாகவும், அமைதியாகவும் வைத்திருப்பதில் கவனம் செலுத்துவேன். எனக்குள் பதற்றம் இருந்தாலும் அதனை நடிகர்களிடம் ஒரு போதும் வெளிப்படுத்த மாட்டேன்.‌ படப்பிடிப்பு முழுவதும் ஏகனை ஒருபோதும் ஏசியதில்லை. அவரை மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் யாரையும் நான் திட்டியதில்லை.

நீங்கள் கயிறுகளை ஆட்டிக் கொண்டிருந்தால் பறவைகள் ஒருபோதும் அமராது. அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருக்கும் போது அவர்களின் இயல்புணர்ச்சி வெளிப்படும். அந்த இயல்புணர்ச்சியை தூண்ட வேண்டும். என்னுடைய வேலையே நடிகர்களிடம் இருக்கும் இயல்புணர்ச்சியை தூண்டுவது தான். அதற்காகத்தான் நான் எப்போதும் படப்பிடிப்பு தளத்தை அமைதியாக வைத்திருப்பேன். அதனால் தான் நான் யாரையும் அறிமுகப்படுத்தினேன் என ஒருபோதும் நினைப்பதில்லை” என்றார்.

Related Posts