கமலி கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு பெருமை; நடிகை ‘கயல்’ ஆனந்தி

சென்னை; ‘கமலி from நடுக்காவேரி’  இந்த திரைப்படம் கிராமத்து பெண்களின் கல்வி பயணத்தை எடுத்துக் கூறும் படம். இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் துரைசாமி,பாடலாசிரியர் கார்த்திக் நேத்த,
நடிகை ஸ்ரீஜா, ரேகா சுரேஷ்,  இமான் அண்ணாச்சி ,நடிகை அபிதா  படத்தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ்,   இயக்குநர் ராஜசேகர் துரைசாமி
நடிகர் பிரதாப் போத்தன்  இசையமைப்பாளர் தீனதயாளன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

படத்தின் நாயகி ‘கயல்’ ஆனந்தி  இந்தப் படம் பற்றி பேசும்போது,

என்னுடைய வாழ்க்கையிலும், சினிமாவிலும் இது முக்கியமான படம். இப்படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அனைத்து பெண்களையும் இணைக்கும் விதமாக இருக்கும். பெற்றோர்கள் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றதும் பலரும் ஏன் இதேபோல படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டதுதான் நினைவிற்கு வந்தது. ஆனால், இந்த கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம்.
இப்படத்தை நிறைய பெற்றோர்களும், பிள்ளைகளும் பார்க்க வேண்டும்  என நெகிழ்ச்சியுடன் கூறினார்

Related Posts